×
 

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக.. விளாசிய எடப்பாடி பழனிசாமி..!

75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி திமுக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த முதற்கட்ட பிரச்சாரம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைத் திரட்டவும், திமுக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

இந்த சுற்றுப்பயணம் 2025ம் ஆண்டு ஜனவரி முதல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை பாதிப்புகள், பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள், மாநிலங்களவை தேர்தல், மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றால் தள்ளிப்போனது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், பழனிசாமி தனது கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்கவும், திமுகவுக்கு எதிராக மக்கள் ஆதரவைப் பெறவும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். 

இதையும் படிங்க: எது மத்திய அரசு, எது மாநில அரசுனு கூட வித்தியாசம் தெரியல.. அதிமுகவை விளாசிய கனிமொழி..!

ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, ஜூலை 8ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி நான்காவது நாளான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வானூர் அருகே திருச்சிற்றம்பலம் 4 முனை சந்திப்பில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் 75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி திமுக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் தந்தது அதிமுக தான். கல்விக்கு முக்கியத்துவம் தராதது திமுக. கல்வி கடன் ரத்து என்றார்கள் அதை செய்யவில்லை, நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதையும் செய்யவில்லை என்றும் விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக இருந்தது. அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஓடி சென்று பார்த்தோம். ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் எடபப்டி பழனிசாமி கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கொடுத்த அழுத்தத்தால் ஆட்சிக்கு வந்து 25 மாதங்களுக்குப் பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்கள். அதுவும் தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமைத் தொகையை தருவார்கள். திமுக வழங்கும் ஆயிரம் ரூபாய்யை நம்பி நாங்கள் தரவிருந்த ரூபாய் 1500-ஐ மக்கள் தவறவிட்டார்கள் என்றும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மனநிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. எடப்பாடிக்கு Z+ பாதுகாப்பை வரவேற்கும் R.B.உதயகுமார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share