"கட்சியை காப்பாற்ற களமிறங்கிய எடப்பாடி"..! தோல்விக்கு என்ன காரணம்..? EPS முக்கிய ஆலோசனை..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடனான இரு நாள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் தொடங்கியது. இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் அதிமுகவுக்கு மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய அளவில் தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், தேர்தல் முடிவுகளின் பின்னணி மற்றும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன.
மேலும், சமீப காலமாக அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைவது போன்ற சவால்களையும் இந்தக் கூட்டத்தில் கையாள்வது எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் அட்டவணை மற்றும் பங்கேற்பாளர்கள்அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்டங்களின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகளுடன் திட்டமிட்ட கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?
இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு வேலூர் மாநகர் மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. நாளை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள், காலை 11.30 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள், மாலை 4.30 மணிக்கு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடைபெறும்.
இதையும் படிங்க: எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்!! எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி! எடப்பாடிக்கு தலைவலி!