×
 

அறிவாலயம் வாட்ச்மேன் டிடிவி! இபிஎஸ் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? கொந்தளித்த அதிமுக

டிடிவி தினகரனை அறிவாலயத்தின் வாட்ச்மேன் என அதிமுக விமர்சித்துள்ளது.

தமிழக வெற்றிக்கழக கொடியை கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி தான் தனது சுற்றுப்பயணத்தின் போது பிடிக்க சொல்லி இருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றி விடுவார் என்ற தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் என்றும் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி பலம் இழந்து காணப்படுகிறது என்றும் கூறினார். அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் இபிஎஸ்- ஐ முதலமைச்சராக ஆக்கவா விஜய் கட்சி தொடங்கியுள்ளார் என்றும் கரூர் சம்பவத்தைக் கொண்டு இபிஎஸ் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. திமுக அரசு CBI விசாரணையை எதிர்ப்பதற்கு கூட முட்டு கொடுக்கும் அளவிற்கு அறிவாலய வாட்ச்மேனாக, நிலைய வித்துவானாக முழுசா மாறிப்போன டிடிவி தினகரனுக்கு அதிமுக பற்றியும், எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் பேச என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளது.

தன் கட்சி பெயரில், கொடியில் அம்மா அவர்களைக் கொண்டிருக்கும் இவரின் ஒவ்வொரு பேச்சும், திமுகவை ஆதரிக்கும் இவரின் ஒவ்வொரு செயலும் ஜெயலலிதாவிற்கு இழைக்கும் துரோகம் என்று கூறியுள்ளது. தனது தனிப்பட்ட பொறாமைக்காக, திமுகவிடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, அறிவாலயம் ஏவும் போதெல்லாம் வீல் வீல் என்று கத்திக் கொண்டு, வாலாட்டும் மற்றுமொரு ஏஜெண்டாக மாறிவிட்ட தினகரனிடம், அவர் முன்னால் இருக்கும் நான்கு ஊடக Mic-களைத் தவிர என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளது. 

இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!

இந்த லட்சணத்தில், வெறும் கொடியும், பெயருக்கு ஒரு கட்சியை வைத்துக்கொண்டு வெட்டிச் சவடால் பேசிக்கொண்டிருக்கும் டிடிவி தினகரன் ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்து, கால்களே இல்லாத நாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்கும் தன் சுயநிலை பற்றி அறிந்துகொள்ளட்டும் என்று சாடியது.

இதையும் படிங்க: "மூன்றிலிருந்து ஐந்து வேணும்"... அதிமுக அடிமடியில் கைவைத்த பாஜக... ஷாக்கில் இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share