×
 

மாணவிக்கு வெட்டு..! ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த திமுக அரசு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!

மீஞ்சூரில் மாணவியை வெட்டிய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார் .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதை கும்பல் பட்டாகத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதை ஆசாமிகளை பார்த்ததும் கத்தி கூச்சலிட்ட மாணவிக்கு நேர்ந்த இந்த துயரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீதமிருக்கும் இரண்டு பேரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. 

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று கூறினார். இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம் என்றும் படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல் எனவும் இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார் என்றும் சாடினார். தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும், தமிழ்நாடு வாழ திமுக வீழவேண்டும் என்றார். 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share