×
 

எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “இனி அதிமுகவே இருக்காது...”... மேடையில் படு ஓபனாக இபிஎஸ் பெயரைச் சொல்லி தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...!

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? என்று கேட்டுள்ளார். குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share