செங்கோட்டையன் மீது மனைவி கொடுத்த புகார்!! சொன்னா தப்பாகிரும்!! அவ்ளோ மோசமான ஆளு! இபிஎஸ் விமர்சனம்!
நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். டிவியில் போட்டு விடுவேன். உங்கள் மீது மனைவியும், மகனும் கேவலமான புகார் கொடுத்தனர். அது பற்றி பேசுவதே என் பதவிக்கு சரியாக இருக்காது என கோவை பிரசாரத்தில் செங்கோட்டையனை இபிஎஸ் விமர்சித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்து பேசினார். இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், செங்கோட்டையனை “மோசமான குணம் படைத்தவர்” என்று கடுமையாக தாக்கினார்.
“நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் எனக்கு தெரியும். டிவியில் போட்டு விடுவேன்” என்று எச்சரித்த எடப்பாடி, “உங்கள் மீது உங்கள் மனைவியும் மகனும் கேவலமான புகார் கொடுத்தனர். அதைப் பற்றி பேசுவதே என் பதவிக்கு சரியாக இருக்காது” என்றார்.
ஜெயலலிதா இருந்தபோது செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்தில், அவரது மனைவியும் மகனும் தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து புகார் கொடுத்ததாகவும், அது மிகவும் கேவலமான புகார் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார். “நான் அப்போது கீழே இருந்தேன். படிக்கட்டில் இருந்து இறங்கியதும் ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டார்” என்று நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!
“மரியாதை இல்லாத மனிதர். அவரது குடும்பத்தினரே இப்படி புகார் கொடுத்திருக்கிறார்கள். நகரச் செயலாளரோ, ஒன்றியச் செயலாளரோ அல்ல, அவரது சொந்த மனைவியும் மகனும் புகார் கொடுத்தனர்” என்று கூறிய இபிஎஸ், “ஜெயலலிதா என்னிடம் ‘இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பு’ என்றார். அப்படிப்பட்ட மோசமான மனிதரை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கியது எனது தவறு” என்றும் ஒப்புக்கொண்டார்.
செங்கோட்டையன் ஒரு காலத்தில் தனது நண்பராக இருந்ததாகக் கூறிய இபிஎஸ், “அவர் என் அமைச்சரவையில் வந்து கண்ணீர் விட்டு கெஞ்சினார். இப்போது வாய்க்கொழுப்பாக பேசுகிறார்” என்றார். மேலும், “100 நாட்கள் சிறையில் இருந்த ஸ்டாலின், கருணாநிதி படம் உள்ள சைக்கிள் வழங்கும் விழாவில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போதே அவர் திமுகவின் உளவாளியாகிவிட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.
“அதிமுகவுக்கு விசுவாசமில்லாதவர். குழிதோண்டி பறிக்கும் உளவாளி” என்று செங்கோட்டையனை விளித்த இபிஎஸ், “இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாக பேசுகிறார். அசிங்கமாக பேசினால் ரோட்டில் நடக்க முடியாது. என்னிடம் அத்தனை ஆதாரங்களும் உள்ளன. எல்லாவற்றையும் டிவியில் போடுவேன்” என்று கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்த பிரசாரம் அதிமுகவுக்குள் நீண்டகாலமாக இருந்த உள் மோதலை வெளிக்கொண்டு வந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், கோபியில் நடைபெற்ற இந்த கடுமையான தாக்குதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!