×
 

சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

இந்த சந்திப்பின்போது 4-ந்தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதன் பின்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

சேலம்: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய கட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கியுள்ளார். அவரை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பழனிசாமியை சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக இன்று முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், கே.பி. முனுசாமி மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் அவரை சந்தித்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது 4-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான அரசியல் சூழல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதால், கட்சியின் உள்ளடி பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க: காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு அ.தி.மு.க. தலைமை இவ்வாறு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.க. வலுவான நிலையில் இருப்பதாக கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், தலைமை இந்த சந்திப்புகளை முக்கியமாகக் கருதுகிறது.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி வரும் சூழலில், இந்த ஆலோசனை கூட்டங்கள் அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட அரசியல் திட்டங்களை வடிவமைக்க உதவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க. முகாமில் பரபரப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share