கட்சியை விட்டு தூக்கிய இபிஎஸ்... இரவோடு இரவாக செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம் - ஷாக்கில் அதிமுக...!
கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 5ம்தேதி அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததற்காக செங்கோட்டையினுடைய பதவிகள் பறிக்கப்பட்டிருந்தன. பதவி பறிரிப்புக்கு பிறகாக நேற்று முன்தினம் பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கே.எஸ். செங்கோட்டையன் சந்தித்திருந்தார். இது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி நேற்று அதிரடியாக கே.எஸ். செங்கோட்டையனை கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் கே. எஸ். செங்கோட்டையன் பயன்படுத்தி வந்த அதிமுக அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமியினுடைய புகைப்படம் நீக்கப்பட்டிருக்கின்றது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் அமைப்பு செயலாளராகவும் கேஎஸ் செங்கோட்டையின் இருந்தபோது கரட்டூரில் அதிமுக அலுவலகத்தை அமைத்து அவர் பயன்படுத்தி வந்திருந்தார். இந்த சூழ்நிலையில் அவருடைய பதவி பறிப்பிற்கு பிறகும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க அந்த அலுவலகத்தையே பயன்படுத்தி வந்தார். ஆனால் அலுவலகத்திற்குள் இருந்த எடப்பாடி பழனிசாமியுடைய புகைப்படங்களை அப்போதே செங்கோட்டையன் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் எடப்பாடி அணி நிர்வாகிகள் நல்ல கவுண்டன் பாளையம் என்ற இடத்தில் புதிதாக அதிமுக அலுவலகம் அமைத்து இயங்கி வருகின்றனர். இதனிடையே நேற்று அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை முற்றிலுமாக நீக்கியது அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனையடுத்து கரட்டூர் உள்ள அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மறைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் படத்திற்கு பதிலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: கட்சி கட்டுப்பாட்டை மீறிட்டாரு.. அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!
இந்த பரபரப்பான ஒரு சூழ்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்தும், தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கியமான அறிவிப்புகளை செங்கோட்டையன் இன்று வெளியிட இருக்கின்றார். இதற்காகத்தான் இன்று காலை 11 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கின்றார். ஏற்கனவே இந்த அலுவலகத்தில் தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதாக அவர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் அதையும் தற்பொழுது கோபி அருகே இருக்கக்கூடிய குள்ளம்பலையம் தனது இல்லத்தில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு செங்கோட்டையன் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்+கே.ஏ.எஸ்+டிடிவி இணைவால் ஆடிப்போன எடப்பாடி...நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முக்கிய புள்ளிகள் திடீர் ஆலோசனை...!