மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக என்னோட கட்சி என்று கூறி வரும் சி.வி சண்முகம் , தொடர்ந்து கட்சி தலைமையை தலைமையை சி.வி சண்முகம் அச்சுறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்
விபத்தில் இறந்த சி வி சண்முகத்தின் தங்கையின் பணத்தின் மூலம் தான் அதிமுகவில் சி.வி சண்முகம் கட்சியில் வளர்ந்ததாகவும், மயிலத்தில் போட்டியிடும் சிவி சண்முகம் மயிலத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அண்ணாதுரையின் ஆத்மா சி.வி சண்முகத்தை வெற்றி பெற வைக்காது என கூறினார்.
சி.வி சண்முகத்தை குறித்து கேள்வி கேட்டால் அல்லது எதிர்த்து பேசினால் உடனே கட்சியிலிருந்து நீக்கிவிட வேண்டுமென மனநிலையில் சி.வி சண்முகம் செயல்படுவதாகவும்,சொந்த கட்சி காரர்களை அழிக்கவும் மாற்று கட்சியினரை அழிக்கவும் சி.வி சண்முகத்திடம் நிறைய பணம் கொடுப்பதாக தெரிவித்தார்
பணபலத்தாலயும் அதிகார பலத்துலையும் தான் சிவி சண்முகம் செயல்படுவதாகவும் சிவி சண்முகத்திற்கு எதிராக பேசுவதால் தனக்கு அச்சுறுத்தல் நிறைய வருவதாகவும் கட்சியில் தன்னை கெளப்பி விட்டவர்கள் சிவி சண்முகத்தின் வலக கரமாக செயல்படுவதாகவும் நிறைய ஒன்றிய செயலாளர்கள் வெளியில் சொல்ல முடியாத அளவில் கட்சியில் பயணிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு விழுப்புரம் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் மயிலம் தொகுயில் இருந்துவ் யாரும் இங்கு பிச்சை எடுக்க வரக்கூடாது என்று கூறிவிட்டு இன்று மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். மயிலத்தில் கண்டிப்பாக மக்கள் சி.வி.சண்முகத்தை தோற்க்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!
விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவி சண்முகத்தை மாற்றினால் எடப்பாடி கை காலில் விழுந்தாவது மீண்டும் அதிமுகவில் இணைவேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த உச்சக்கட்ட மோதல்... சி.வி.சண்முகத்திற்கு பகிரங்க எதிர்ப்பு... நகர செயலாளர் போர்க்கொடி...!