முகத்தை துடைத்தது ஒரு குத்தமா?... திமுகவை வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி...!
எடப்பாடியாரின் பிரச்சாரத்தைப் பார்த்துப் பதறிப் போன திமுக அவரது பிரச்சாரக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுகிறார்கள். உடம்பில் வியர்த்தால் கூட துண்டை வைத்துத் துடைக்க முடியவில்லை.
சிவகாசியில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் அதிமுகவின் பல்வேறு பிரிவு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
எடப்பாடியாரின் பிரச்சாரத்தைப் பார்த்துப் பதறிப் போன திமுக அவரது பிரச்சாரக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுகிறார்கள். உடம்பில் வியர்த்தால் கூட துண்டை வைத்துத் துடைக்க முடியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தின் நன்மைக்காக பல கோரிக்கைகளையும், பணி குறித்தும் பேசிவிட்டு வெளியேறிதிரும்பி வந்து தன் முகத்தை துடைத்ததை ஒரு பெரிய குற்றமாக்கியுள்ளனர். நாங்கள் என்ன தப்பான இடத்திற்கா சென்று வந்தோம்.
இதையும் படிங்க: தவெகவுக்கு அந்த தகுதியில்லை; விஜய்க்கு அதுக்கு அருகதை இல்ல.... கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி...!
நாட்டின் உள்துறை அமைச்சரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததைக் கண்டு உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது, நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். துண்டை வைத்து துடைத்தால் என்ன? துண்டைக் கழுத்தில் போட்டால் என்ன? துண்டை எடுத்து வெளியே போட்டால் உங்களுக்கு என்ன? திமுக கருத்து ரீதியாக மோத வேண்டும்.
தேர்தல் நேரத்தில் வில்லன்கள் கதாநாயகன் வேடமிட்டு வருவார்கள்.திமுக ஆட்சி நல்லாட்சி என பாட்டு போட்டு வாக்கு கேட்பார்கள். மக்கள் பார்த்து வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பணியை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல இயல்பான தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்திருக்கிறார். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் வேலை பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது என்றார்.
இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்... தவெக சுற்றுப்பயண திட்டத்தில் அதிரடி மாற்றம் - வெளியானது முக்கிய தகவல்...!