×
 

திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

வலிமைசேர்க்க வேண்டிய இந்தநேரத்தில், துணைநிற்கவேண்டிய இந்த நேரத்தில் கழகத்தின் மூத்த தலைவரான தாங்களே வழிதவறி கண்ணியம் இன்றி தங்களுடைய கருத்தை பொதுவெளியலே விவாதிக்கலாமா?

அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமி யார் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் தலைமையில் அதிமுக தோல்வியைச் சந்தித்து வருகிறது போன்ற காரணங்களை குற்றச்சாட்டாக முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இன்றைக்கு அவைக்குள் விவாதிக்க வேண்டிய விசயங்களை எல்லாம் பொது வெளியிலே விவாதிப்பது ஆரோக்கியமான அரசியலாக அமையாது என்பது கழகத்தின் துாண்களாக இருந்து துாய பணியாற்றி வருகின்ற மூத்த தலைவர்களுக்கு தெரியாததது ஒன்றும் அல்ல. இந்த சோதனையான காலகட்டத்தில் எல்லோருக்கும் புத்திமதி சொல்லி வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருக்கின்ற தலைமுறை தலைமுறையாக கழகத்தில் பணியாற்றி வருகின்ற மூத்த தலைவர்கள் மீண்டும் மீண்டும் தங்களின் கருத்து வேறுபாடுகளை இது போன்ற பொது வெளியில் விவாதத்திற்கு முன்வைப்பது கழகத்தின் கோடான கோடி விசுவாச தொண்டர்களுக்கு கடும் மனஉலைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதோடு தங்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தையும் இழப்பதாக இருக்கிறது. ஒன்றை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் எத்தனை முறை நீங்கள் பொதுவெளியிலே கருத்து வேறுபாட்டை மனக்குமுறலை ஆதங்கத்தை அரசியல் நாகரீகமற்று அள்ளி தெளித்தாலும் அரசியல் மரபை மீறி கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து பொது வெளியிலே விவாதித்தபோதிலும்,

 எடப்பாடியார் அவர்கள் பொறுமை காத்து அரசியல் மரபுகளை, அரசியல் நாகரீகத்தை கடைபிடித்து "சொல்லுக்கு சொல்" என்ற நிலையை கடைபிடிக்காமல் தங்களின் கருத்து வேறுபாடுகளை கருணையோடு கவனித்து விசுவாச தொண்டர்களின் நம்பிக்கை சிதைந்து போய்விடாமலும் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடாமலும் கழகத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் செல்வாக்கும் சிதைந்துவிடாமல் நிதானமாக பொறுமையாக தாய் உள்ளத்தோடு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கழகத்தையும், கழக தொண்டர்களையும் தயார்படுத்தி நம்பிக்கையூட்டி கழகத்தை எதிர்கால வெற்றியை நோக்கி அழைத்து அறிவுரைகளையும், செல்வதற்கு என்னென்ன கருத்துகள், அறிவுரைகள், யோசனைகள் எந்த நிலையிலிருந்து எந்த திசையில் இருந்து வந்தாலும் அத்தனை கருத்துகளையும், யோசனைகளையும் தாய் உள்ளத்தோடு கவனமாக கருத்திலே கொண்டு பரிசீலித்து கழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றி வருகின்ற சாமானிய தலைவரை சர்வாதிகார தலைவராக பொது வெளியிலே சித்தரிக்க முயல்வது தாங்கள் கழகத்திற்கு செய்கின்ற நல்ல பணியாக தெரியவில்லை. கழகத்தை சேதாரப்படுத்துகிற செயலாகத்தான் எங்களை போன்ற தொண்டர்கள் புரிந்துகொள்ள முடிகிறது.

இதையும் படிங்க: எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

ஒரு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தீர்ப்பை இந்த தமிழ்நாட்டில் யார்தான் சரியாக கணித்தார்கள்? படைபலம், பணபலம், ஆட்சிபலம், அதிகாரபலம் அத்தனையும் வைத்துகொண்டு தேர்தலை சந்தித்த திமுகவே தேர்தல் கள நிலவரத்தை துல்லியமாக கணிக்க தவறியதால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் திமுகவின் வாக்கு வங்கியும் மிகப்பெரிய அளவிலே இழந்திருக்கிறது. கட்சியின் தலைவரே தான் நின்ற தொகுதியில் தோற்று போய் இருக்கிறார். அவர்களோடு துணைநின்ற கூட்டணி கட்சிகளெல்லாம் வெளியேறிவிட்டனர். தற்போது கட்சியின் செல்வாக்கை தக்கவைக்க, மீட்டெடுக்க தட்டுதடுமாறி கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் திமுக தொண்டனும் கட்சியை விட்டு வெளியேறவில்லை.

அதேபோன்றுதான் தேர்தல் களத்தில் நின்று எந்தகாலத்திலாவது ஆட்சிக்கு வருவோம் என நம்பிக்கையோடு மக்களை சந்தித்து வெற்றிவாய்ப்பை இழந்த பலகட்சியில் இருந்து ஒருவர் கூட வெளியேறவில்லை. ஆனால் திட்டமிட்டு கழகத்தை சிதைக்க நினைகின்ற விஜய் தம்பியின் ஒட்டு மொத்த அரசியல் அநாகரிகத்தின் அரங்கேற்றத்தை போர்கால நடவடிக்கையாக தடுத்து நிறுத்திட நாம் அனைவரும் ஒற்றுமையாக சிந்தித்து செயல்பட வேண்டிய இந்தநேரத்தில், மனகஷ்டத்தோடு நம்பிக்கையிழந்து வழி தவறி செல்கின்ற தொண்டர்களை சரியாக வழிநடத்த வேண்டிய இந்த நேரத்தில், நம் உயிரிலும் மேலான கழகத்தை காப்பாற்ற வேண்டிய இந்த நேரத்தில், கழக பொதுச்செயலாளர்,  வலிமைசேர்க்க வேண்டிய இந்தநேரத்தில், துணைநிற்கவேண்டிய இந்த நேரத்தில் கழகத்தின் மூத்த தலைவரான தாங்களே வழிதவறி கண்ணியம் இன்றி தங்களுடைய கருத்தை பொதுவெளியலே விவாதிக்கலாமா? இது குற்றச்சாட்டு அல்ல கடைகோடி விசுவாச தொண்டர்களின் மனக்குமுறலே. 

ஆகவே வருகின்ற தேர்தல்களில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் மக்களின் தலைமையில் நாம் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைத்து நம்பிக்கையை பெறுகின்ற வகையில் தேர்தல் களத்ததை சந்தித்து மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் கழகம் சந்திக்காத சோதனைகளா? கழக தொண்டர்களின் ஒத்துழைப்போடு மக்களின் சோதனைகளையெல்லாம் ஆதரவோடு சாதனைகளாக்கிய வெற்றி வரலாற்றை கழகத்தின் மூத்த முன்னனி நிர்வாகிகளான தாங்கள் அறியாததது ஒன்றும் அல்ல.

மேலும் மாண்புமிகு அம்மா அவர்கள் நம்மை விட்டு மறைந்த போது கழகத்தை எதிரிகள் அபகரிக்க முயற்சித்தபோது, அழிக்க முயற்சித்தபோது உங்களை போன்ற மூத்த தலைவர்கள் கழக தொண்டர்களோடு நிர்வாகிகளோடு துணை நின்று ஒரு சாமானியரான புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை நம் வழிகாட்டியாக, நம் உயிரினும் மேலான தலைவராக, கழக பொதுச்செயலாளராக, தாய்தமிழ்நாட்டின் சாமானிய முதலவராக அடையாளம் காட்டினீர்கள். மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் தாய்நாட்டு மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்பணித்து நான்கரை ஆண்டுகாலம் நாடு போற்றும் நல்லாட்சியை வழங்கினார்கள். தாங்களும் அதிலே முக்கிய அங்கம் வகித்தீர்கள். பிறகு கழகம் எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்தபோதும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாயகனாக எதிரிகளுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை


சிம்மசொப்பணமாக கழகப்பணியும், மக்கள்பணியும் மேற்கொண்டு வரலாறு படைத்தார் என்பதை தாங்கள் அறிவீர்கள் அதோடு இந்த தேர்தலில் சாமானியர் எடப்பாடியார்தான் வெற்றி பெற்று தமிழநாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் பணியை தொடருவார் என்று நம்பினோம். ஆனால் யாரும் யூகிக்கமுடியாத வயிைலே, கணிக்க முடியாத வகையிலே இரும்பு அடிக்கின்ற இடத்திலே ஈ-க்கு என்ன வேலை என்றிருந்த மக்களிடத்திலே, அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்  என்றிருந்த மக்களிடத்திலே, மக்கள் தொண்டுக்கும் மக்கள் சேவைக்கும் விஜய் தம்பிக்கும் என்ன தொடர்பு என்றிருந்த மக்களிடத்திலே, அரசியலுக்கும் அதிகாரத்திற்கும் விஜய் தம்பிக்கும் என்ன தொடர்பு என்றிருந்த மக்களிடத்திலே, சிவபூஜைக்குள் கரடி புகுந்தததை போல தமிழ்நாட்டு மக்களின் மனத்திற்குள் புகுந்து மாயாஜாலம் மந்திர விளையாட்டை நிகழ்த்தி இப்போது அதிகாரத்ததை கைப்பற்றி இருக்கிறார் விஜய் தம்பி.

ஆனால் தமிழக அரசியலில் வீசிய விஜய் சுனாமியின் பாதிப்பு தற்போதுதான் மெல்ல மெல்ல தமிழக மக்களுக்கு புரிய வருகிறது. வெகு சீக்கிரத்திலே நிழல் எது? நிஜம் எது? மாற்றம் எது? ஏமாற்றம் எது? என்பது புரியவரும். அப்போது நாம் அனைவரும் எடப்பாடியார் தலைமையில் புதுப்பொழிவோடு புதிய வலிமையோடு, புதிய நம்பிக்கையோடு, புதிய வெற்றி சரித்திரம் படைப்போம். அதுவரை பேரரறிஞர் அண்ணா நமக்கு கற்றுத்தந்த "கடமை கண்ணியம் கட்டுபாட்டை” நாம் அனைவரும் கடைபிடிபோம். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: “இனி அதிமுகவே இருக்காது...”... மேடையில் படு ஓபனாக இபிஎஸ் பெயரைச் சொல்லி தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share