×
 

தமிழகமே பரபரப்பு... ஒருநாள் விட்டு ஒருநாள் பாலியல் வன்கொடுமை... கொந்தளித்த தங்கமணி...!!

தமிழகத்தில்  பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் இல்லை என்றால் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் கற்பழிப்பு என்பது இன்று தமிழகத்திலே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில்  பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் இல்லை என்றால் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாலியல் வன்கொடுமை என்பது இன்று தமிழகத்திலே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கின்றது என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றச்சாட்டு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, முன்னதாக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான எஸ்.ஆர்.எம்.டி சந்திரசேகரை அறிமுகம் செய்தார். பின்னர் தொடர்ந்து அவர் பேசுகையில், தொய்வில்லாமல் இருபது நாட்கள் பணியாற்றி நாமக்கல் மாவட்டத்திலேயே திருச்செங்கோடு தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதென்ற பெருமையை  எடப்பாடியாரின் ஆசி பெற்ற வேட்பாளராக வெற்றி பெற்றுத் தர வேண்டுமென்று இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறுகின்ற தேர்தல். இரட்டை இன்ஜின் வேணுமா இல்லை, மாநிலத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் சுயநலத்திற்காக அரசியல் செய்து கொண்டிருக்கின்ற திமுக வேணுமா எனும் தேர்தல் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி நடைபெறுகின்ற தேர்தல். இந்த ஐந்தாண்டு காலம் திமுகவினால் அனைத்து தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, லாரி உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, விசைத்தறி உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, ரிங்ரோடாக இருந்தாலும் சரி அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கும் மேலாக கிராமத்தில் இருக்கின்ற அந்த நூறு நாள் வேலைவாய்ப்பு பெண்களுக்கு என்பது நூறு நாள் வேலைவாய்ப்பை இந்த ஐந்தாண்டு காலத்தில் ஐம்பது நாட்கள், முப்பது நாட்கள் என்று கொடுத்து அந்த நூறு நாள் வேலைவாய்ப்பை இல்லாமல் செய்து, இன்று மத்திய அரசின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி ... தவெக தலைவர் மீது பாய்ந்தது 5 வழக்குகள்... இரண்டே நிமிடத்தில் தலைகீழாக மாறிய களம்...!!

ஏழையினுடைய வேலைவாய்ப்பைப் பறித்த அரசு திமுக அரசு. ஆக எந்தத் தொழிலுமே சரியில்லை, வேலை வாய்ப்பும் இல்லை, படித்தவர்களுக்கு வேலையும் இல்லை, ஆக இந்த ஆட்சி தேவையற்றதுஎன்பது தான் வருகின்ற ஏப்ரல் இருபத்தி மூன்றாம் தேதி நடைபெறுகின்ற தேர்தல் என்பதை மனதிலே வைத்து நாம் செயல்பட வேண்டும். அதே போல இந்த ஆட்சியைப் பார்த்தீர்கள் என்று சொன்னால், ஐந்தாண்டு காலம் அனைத்து தரப்பு மக்களுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். காரணம் விவசாயத் தொழிலும் இல்லை, அதே போல விசைத்தறித் தொழிலும் இல்லை. நாம் ஏற்கனவே சொன்னதைப் போல மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு என்று எல்லாமே உயர்த்தி விட்டார்கள்.

அதை விட மிக மோசம் என்று நீங்கள் மக்களிடத்திலே சொல்ல வேண்டியது என்னவென்று சொன்னால், இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் இல்லை என்றால் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் கற்பழிப்பு என்பது இன்று தமிழகத்திலே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதே போல போதைப் பொருள் என்பது இந்தியாவுக்கே தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலம் என்ற அளவுக்கு இன்று போதை நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இதைத் தான் மீண்டும் தடுக்க வேண்டும், பெண்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், இரண்டு வயதுக் குழந்தையிலிருந்து எழுபது வயது வயதானவர்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால், அதுவும் அந்த இரண்டு வயதுக் குழந்தையை கற்பழித்துக் கொன்றது யார் என்று சொன்னால் திமுகவினுடைய கவுன்சிலருடைய மகனாக இருக்கின்ற காரணத்தினால் அவருக்குத் தைரியம் நாம் இருக்கின்ற கட்சி ஆளுங்கட்சி. நம்முடைய கட்சி ஆகையால் நாம் என்ன செய்தாலும் இந்த அரசு கண்டு கொள்ளாது என்று அந்த தைரியத்தின் காரணமாகத்தான் இந்த குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

போதைப் பொருளும் அதே போல அதிகமாகுவதற்கு காரணம் அங்கே திமுகவினர் அதிகமாக போதைப் பொருளைப் பயன்படுத்துகின்ற, விற்கின்ற காரணத்தினால் தான். அந்த போதைப் பொருளும் இன்று தமிழகத்திலே வந்திருக்கின்றது. இதே காவல்துறையைத் தான் பத்தாண்டு காலம் அண்ணன் ஆளுகின்ற போதும், அம்மா அவர்கள் இருக்கின்ற போதும் இதே காவல்துறை தான் இருக்கின்றது. அப்பொழுது கொலைகளோ, அல்லது கற்பழிப்பு கிடையாது. போதைப் பொருள் கிடையாது என்று சொன்னால் அவர்களுக்குச் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற வகையில், ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமி அவர்களும் சுதந்திரமாகக் காவல்துறை செயல்படுவதற்கு அதிகாரம் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இன்று திமுகவைக் கேட்டுத் தான் காவல்துறை செயல்படுகின்ற அளவுக்கு அவர்கள் கைகளும் கட்டப்பட்டிருக்கின்ற காரணத்தினால் தான் குற்றவாளிகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அதே போல கொலைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. போதையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால் மீண்டும் அண்ணன் எடப்பாடியார் வந்தால் மட்டும் தான் தமிழகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை நீங்கள் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பேசினார்.

இதையும் படிங்க: பாமக வேட்பாளர் பட்டியல் 2026: சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் 5 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share