EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!
முன்னாள் MLA வீட்டில் 5 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் அழைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமூக சேவகருமான ஜான் ஜோசப் வீட்டில் கடந்த 5 நாட்களாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் இன்று சென்று புகார் மனு அளித்துள்ளார். கடந்த 15-ம் தேதி முதல் எனது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 15-ம் தேதியே கொல்லங்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்கிருந்த புகார் புத்தகத்தில் நேரடியாகப் புகார் பதிவு செய்தேன். ஆனால், அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்ல அதனைத் தொடர்ந்து மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவும் புகார் அளித்தேன். அதற்கு 'எங்களது குழு உங்களை விரைவில் தொடர்பு கொள்ளும் என்ற குறுஞ்செய்தி மட்டுமே வந்தது, பணியாளர்கள் யாரும் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்னகம் வாட்ஸ்அப் எண்ணிற்கும், கொல்லங்கோடு மின்சார வாரிய இளநிலை பொறியாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் அனுப்பியதாகவும் அவரும் நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தாரே தவிர, இதுவரை மின் இணைப்பு சீரமைக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!
புகார் புத்தகம், செயலி, மின்னகம் வாட்ஸ்அப், அதிகாரிக்கு நேரடியாகத் தகவல் என பல வழிகளில் புகார் தெரிவித்தும் 5 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆச்சிரி சந்தித்து மனு அளித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கே 5 நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் மின்சார வாரியம் அலட்சியம் காட்டி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்எல்ஏவுக்கே இந்த நிலையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தின் ஆட்சியா.? சாத்தானின் ஆட்சியா.? மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்த ஸ்டாலின்..!!