×
 

இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

ராமதாசுடன் இணைந்து பணியாற்ற நானே விரும்பினாலும் வி.சி.,யினர் ஏற்க மாட்டார்கள். அப்படி செய்தால் பட்டிலினத்தவர்களின் ஓட்டுகள் அதிகளவில் தவெக பக்கம் சென்றுவிடும்.

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தொடர்ந்து பயணிக்கும் என அதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டு வரும் வி.சி.க., இதுவரை ஒரு சட்டசபை தேர்தல் மற்றும் இரண்டு லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. வரும் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அவர்கள் கூறினர்.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தரப்பினர் தி.மு.க. கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு வி.சி.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"பா.ம.க.வின் எந்த தரப்பு வந்தாலும் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம்" என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெளிவாக கூறியுள்ளார். ராமதாஸ் தரப்பு பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. தலைமை திருமாவளவனிடம் சமரச பேச்சு நடத்தியது. ஆனால், திருமாவளவன் அதை உறுதியாக மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

வி.சி.க. நிர்வாகிகள் கூறுகையில், "ராமதாஸுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்பினாலும், வி.சி.க. தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி செய்தால் பட்டியலின மக்களின் ஓட்டுகள் அதிக அளவில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பக்கம் சென்றுவிடும். அதற்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும்" என தி.மு.க. தலைமையிடம் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். இது தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்தால் வன்னியர் சமூக வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமாகலாம். ஆனால், தலித் வாக்குகளை இழக்கும் ஆபத்து உள்ளது. திருமாவளவனின் நிலைப்பாடு, கூட்டணி உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

த.வெ.க. போன்ற புதிய கட்சிகளின் எழுச்சி, பழைய கூட்டணிகளை அசைத்து பார்க்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த சமரச பேச்சுகள் எந்த முடிவுக்கு வரும் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள், இது 2026 தேர்தலின் திருப்புமுனையாக இருக்கலாம் என்கின்றனர். 

இதையும் படிங்க: ராமதாஸை சேர்த்துக்கலாம்?! செல்வப்பெருந்தகை சிபாரிசு! திமுக கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி.க மோதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share