×
 

ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். சர்ச்சை வீடியோ! மோகன் பகவத் பேசியது என்ன? உண்மை கண்டறியும் குழு தகவல்!

நம் ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வீடியோ போலியானது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உறுதி செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் "நம் ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்" என்றும், "2028-க்குள் ஹிந்துக்கள் அல்லாத வீரர்களை நீக்காவிட்டால் பிரதமர் மோடி வெளியேற்றப்பட்டு யோகி ஆதித்யநாத் அமர்த்தப்படுவார்" என்றும் பேசியதாகக் காட்டப்பட்ட வீடியோ முழுக்க டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட போலி என்று தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில் மோகன் பாகவத் ராணுவத்தில் உள்ள ஹிந்துக்கள் அல்லாத 50 சதவீத வீரர்களை நீக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்துவதாகக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், PIB-யின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) ஆய்வு செய்து உண்மை நிலையை வெளியிட்டுள்ளது.

PIB வெளியிட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "இந்த வீடியோ முழுக்க முழுக்க போலியானது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அத்தகைய எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராணுவத்தில் ஹிந்துக்கள் அல்லாதோரை நீக்க வேண்டும் என்றோ, யோகி ஆதித்யநாத்தை பிரதமராக்க வேண்டும் என்றோ அவர் பேசியதாகக் காட்டப்பட்டுள்ளது டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி. இது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளது."

இதையும் படிங்க: மாம்பழ சின்னத்துக்கு போட்டா போட்டி..!! ராமதாஸ் வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..!!

மேலும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இத்தகைய போலி வீடியோக்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், பொய் தகவல் பரப்புபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் PIB எச்சரித்துள்ளது. இத்தகைய போலி உள்ளடக்கம் தென்பட்டால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல, மத்திய பட்ஜெட் குறித்து டெலிகிராம் சேனல்களில் 'ஸ்கேன்' செய்யப்பட்ட நகல்கள் பரவியதும் போலி என்று PIB உறுதி செய்துள்ளது. அவை முழுக்க திருத்தப்பட்ட புகைப்படங்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் போலி செய்திகள், டீப் ஃபேக் வீடியோக்களின் ஆபத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் இத்தகைய போலி உள்ளடக்கங்கள் சமூக ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: காங்கிரசை கழட்டிவிட்ட திருமா!! மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பு! தமிழ்நாட்டில் உள்ளே! கேரளாவில் வெளியே!! அரசியல் லாஜிக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share