×
 
☰

தவெகவில் வெடிக்கிறதா அதிருப்திப் புயல்? கூண்டோடு வெளியேற ரெடியாகும் முக்கிய நிர்வாகிகள்? விஜய்க்கு புதிய சவால்!

இவர்கள் தனிப்பட்ட முறையில் விஜயை சந்தித்து கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களை விவாதிக்க விரும்பினர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மூன்று மாதங்களுக்கு முன் இணைந்த அதிமுக முன்னாள் முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்ட சுமார் 11 பேர், கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் இணைந்தனர். அதிமுகவில் நீண்டகால அனுபவம் பெற்ற இவர்கள், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து தவெகவை நோக்கி நகர்ந்தனர்.

இணைந்த பிறகும் நீண்ட நாட்களாக எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் அவர்களை துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டார். மொத்தம் 15 பேருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அறிவிப்பிற்குப் பிறகும் அவர்களுக்கு குறிப்பிட்ட கடமைகள் அல்லது செயல்பாட்டுப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் அதிருப்தி தலைதூக்கியுள்ளது.

இவர்கள் தனிப்பட்ட முறையில் விஜயை சந்தித்து கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களை விவாதிக்க விரும்பினர். தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், விஜய் அல்லது முக்கிய அமைச்சர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. “பதவி கொடுத்துவிட்டு செயல்பட வைக்காமல் வைத்திருப்பது எப்படி அரசியல் செய்ய உதவும்?” என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் தவெகவிலிருந்து விலகலாமா என ஆலோசித்து வருகின்றனர். எம்.சி.சம்பத் அதிக கவலையில் இருப்பதாகவும், அதிமுகவுக்குத் திரும்பினால் மரியாதை இருக்காது என்பதால் திமுகவை நோக்கி சிந்திப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், இவருடன் இணைந்த மற்றவர்கள் “நெகட்டிவ் முடிவுகளை எடுக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். நல்லது நடக்கும்” என அமைதிப்படுத்தி வருகின்றனர். கட்சித் தரப்பில், அரசுப் பதவிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்க மனமில்லாத சிலர், குழுவாக வெளியேறும் சாத்தியத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

தவெக ஆட்சியில் இணைந்த அனுபவசாலி தலைவர்களுக்கு உரிய இடம் அளிப்பது கட்சியின் வலிமையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போதைய நிலைமை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share