×
 

பாமகவுக்கு குட் பை? தமிழக என்.ஆர்.காங்கிரஸ் தலைவராகிறார் அருள்?! ஆகஸ்ட் 9-ல் நடக்கப்போகும் அடுத்த அரசியல் நகர்வு!

பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், சமீபத்தில் புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, என்ஆர் காங்கிரஸ் கட்சியில் அருள் இணைவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.

பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருள், சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, அவர் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில், அவரது எதிர்கால அரசியல் பயணம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், காமராஜர் பிறந்த நாள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னை நகரில் சிறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அருள் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியில் தமிழக என்ஆர் காங்கிரஸ் தலைவராக அருள் அறிவிக்கப்படலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அருளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், அதற்கு தனது ஆதரவாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வதாகவும் தெரிவித்த அருள், தனது அடுத்த அரசியல் முடிவு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் குறிப்பிட்டார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், அருளின் நேர்முக உதவியாளர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், அருள் ஏற்கனவே என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாக பதிவு செய்துள்ளார். எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: “அரசியலில் இருந்து விலகுகிறேன்”..! பாமகவில் தலைமுறை மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share