×
 
☰

“இதை செய்யக் கூடாது... மீறினால்...” - சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

மத்திய மற்றும் மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை விமர்சனம் செய்து பேட்டி அளித்தாலோ, ரீல்ஸ் வெளியிட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அரசு ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சனம் செய்தாலோ, ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டோ விமர்சனங்களை முன்வைத்தாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளைப் பொது வெளியில், சமூக ஊடகங்களிலோ அல்லது மீம்ஸ் மூலமாகவோ விமர்சனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அரசு சார்ந்த கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், அரசின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்களைச் செய்யக் கூடாது என்றும் அந்தச் சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாதிய ஒடுக்குமுறை..! மாணவன் தற்கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்.!!

மேலும், இந்தச் சுற்றறிக்கையை மீறிச் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பொது சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற விமர்சனங்கள் அரசின் செயல்பாடுகளுக்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான முகாந்திரங்கள் இருப்பதாகவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் என்னென்ன, அவற்றை எந்தெந்தச் சூழல்களில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி கொடூரம்.. தாய் கொலை.. கடத்தப்பட்ட 2 சிறுமிகள்.! நடந்தது என்ன.? SP விளக்கம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share