குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!
முதலில் அவர்களுடைய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறியதாக ராமதாஸ் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையை கேட்டேன் என்றும் கூறினார்.
களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
இதையும் படிங்க: ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..!
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம் என பாமக தலைவர் ராமதாஸ் கூறினார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அனைவருமே அரசியல் ரீதியாக கூறுவதுதான். முதலில் அவர்களுடைய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அப்படியென்றால், மக்களே பார்த்துக் கொள்ளுங்கள். மக்களின் மீது நாட்டமில்லாதவர்கள், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் இவ்வாறு கூறுவார்கள். மக்களை நாடிச் செல்பவர்கள்தான் உண்மையாக மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் சேவகர்களாக இருக்க முடியும். எனவே, அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நீலகிரி சென்று முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கவில்லை. தினம்தோறும் அங்கும் மக்கள்பணி தான் செய்தார். பள்ளி, மருத்துவமனைகளில் ஆய்வு, யானைகள் முகாமில் ஆய்வு, யானைப் பாகன்களுக்கான வீடுகளைத் திறந்துவைத்துள்ளார். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை ஓய்வு என்பது இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார். கடந்த கால முதல்வரைப் போல, நடந்த சம்பவங்கள் எனக்கு தெரியாது. நான் டிவியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறும் நிலையில் இன்றைய முதல்வர் இல்லை என்றார்.
இதையும் படிங்க: நசுக்கப்பட்டவன் நான்தான்! கூட்டத்தில் இருபுறமும் நெறிப்பார்கள்!! எதிரணி கலாய்களுக்கு திருமா கூல் ரிப்ளை..!