தவெக தலைவர் விஜய் முதல்வராக டெல்லி ஆசைப்பட்டது! திரைமறைவில் நடந்த பேரம்!! புட்டு புட்டு வைத்த ஆதவ் அர்ஜூனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையிலிருந்து வெளிவந்தால், விஜய்யை முதல்வராக்க டெல்லி தயாராக இருப்பதாக கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஆர்.கே. நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பரபரப்பான கருத்துகளை வெளியிட்டார்.
“தவெக பாஜகவுடன் சென்றுவிடும், டெல்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது, விஜய்க்கு சிபிஐ அழுத்தம் கொடுக்கிறது என்று திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து பொய் பிரசாரம் செய்தன. ஆனால் உண்மை என்னவென்றால், மிரட்டுபவர்கள்தான் பயப்படுகிறார்கள். அமைதியாக இருப்பவர்கள்தான் உண்மையில் தைரியசாலிகள்” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனா மேலும் பேசுகையில், “விஜய் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால்தான் அவரது படம் ‘ஜனநாயகன்’ தாமதமாக வெளியானது. அவர் மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து வெளியேறியிருந்தால், டெல்லி அவரை முதல்வராக்க தயாராக இருந்தது. ரூ.1,500 கோடி சம்பாதித்திருப்பார்” என்று அதிரடியாகக் கூறினார்.
இதையும் படிங்க: தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!
திருமாவளவன் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். “திருமாவளவன் மீது எனக்கு அன்பு உண்டு. ஆனால் திமுகவை நம்ப வேண்டாம் என்று நான் சொன்னதற்காக என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். திமுக பண்ணையார்த்தனத்தை விட்டு இன்னும் மாறவில்லை. 2011-ல் கலைஞர் விசிகவுக்கு 10 தொகுதி கொடுத்தார். அதேபோல் மதிமுகவை முடித்தது போல விசிகவையும் முடிக்க திமுக தயாராக உள்ளது. திருமாவளவன் இதை வலியுடன் உணர்ந்துதான் பேசினார்” என்றார்.
தவெகவை பாஜகவின் ‘பி-டீம்’ என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, “அப்படியென்றால் ஜனவரி 10-ம் தேதியே ஜனநாயகன் வெளியாகி விஜய் 1,500 கோடி சம்பாதித்திருப்பார். ஆனால் அவர் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் படம் முடக்கப்பட்டது” என்று விளக்கினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் அரசியல் சமன்பாடுகள் மாறும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: தேர்தல்ல சீட்டும் கொடுக்கல! கட்சியில பதவியும் கொடுக்கல! தவெகவில் இணைந்த மாஜிக்கள் குமுறல்!