இவர் தான் எனது பாஸ்!! மோடி அறிமுகப்படுத்திய நபர்!! தலைவர்கள் மாறலாம்! கொள்கை மாறாது என சூசகம்!
''நான் பாஜ கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக்கொண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மோடி, கட்சியின் புதிய தலைவரைப் பாராட்டியதோடு, தன்னை "பாஜக ஊழியன்" என்று குறிப்பிட்டு உணர்ச்சிமிகு கருத்துகளைப் பகிர்ந்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது: "உலகின் மாபெரும் கட்சியான பாஜகவின் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். கட்சியை வலுப்படுத்த பங்களித்த அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் நன்றி.
நிதின் நபின் இப்போது நமது தலைவர். அவரது பொறுப்பு பாஜகவுடன் மட்டும் நின்றுவிடாது – தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும். நான் பாஜக கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ்.
இதையும் படிங்க: பாஜ தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு! பிரதமர் மோடி, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் வாழ்த்து!!
கட்சியின் தலைவர்கள் மாறலாம், ஆனால் கொள்கை மாறாது. தலைமை மாறுகிறது, ஆனால் திசை மாறுவதில்லை. பாஜக ஒரு வித்தியாசமான கட்சியாக உருவெடுத்தது – இப்போது அது ஆளும் கட்சியாக தன்னை நிரூபித்துள்ளது.
நான் ஒரு கட்சித் தொண்டன். கட்சி தொடர்பான விஷயங்களில் நிதின் நபின் தான் முடிவு செய்வார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழுப் பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து நிதின் நபின் தன்னை நிரூபித்துள்ளார். அவரிடம் இளமையும், நீண்ட கால அனுபவமும் உள்ளது.
இது ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் ஒரு அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிப்பது கடினம் – ஆனால் பாஜக இந்த போக்கை முறியடித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பாஜக விரைவில் கேரளாவிலும் ஆட்சி அமைக்கும்."
பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "நிதின் நபின் என் பாஸ்" என்ற வார்த்தைகள் பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. 45 வயதான நிதின் நபின் பாஜக வரலாற்றில் இதுவரை இருந்த தலைவர்களில் இளம் வயது தலைவராக பதிவாகியுள்ளார்.
பாஜகவின் புதிய தலைமை எப்படி கட்சியை மேலும் வலுப்படுத்தும்? 2026 தேர்தல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்?!! தீவிர ஆலோசனை!! ஜன., 20-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!