×
 

அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் எனவிசிக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், அவர் வெற்றி பெற்று தமிழக அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விசிக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக மக்களின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதும் தமிழக மக்களின் விருப்பமாக இருப்பதாகவும், அந்த எண்ணத்தையே இந்தத் தீர்மானம் பிரதிபலிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

இந்தத் தீர்மானத்தின் மூலம், கட்சித் தலைவர் திருமாவளவனின் கவனத்திற்கு செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளும், ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், அண்மையில் சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள சூழலில், திருமாவளவன் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஓமலூரில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share