பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? - நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ராமதாஸ்..!
பாமக சமூக நீதிப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து 4வது நாளாக அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி நடந்து வரும் நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தி வருகிறார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர், தலைவர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நேற்று முன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர்.
இன்று தைலாபுரத்தில் பாமக சமூக நீதிப்பேரவை கூட்டம் பாமக நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது. மாவட்ட செயலாளர், மகளிர் அணி, இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் வன்னியர் சங்கத்தை அடுத்து இன்று நான்காவது நாட்களாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமைநிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தை தொடர்ந்து 4வது நாளாக அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
விரைவில் அன்புமணியை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக அவருக்கு ஆதரவாக பாமகவில் செயல்படக்கூடிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நீக்க ராமதாஸ் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக நிர்வாகிகளை ராமதாஸ் நேருக்கு நேராக கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பா - மகன் சண்டைக்கு எப்போ எண்டு?... தைலாபுரத்தில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி - ஜி.கே.மணி ஓபன் டாக்...!
கூட்டத்தினரிடையே பேசிய ராமதாஸ், கட்சியில் அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடுவேன் என்று சில வதந்திதகள் பரவின. அப்படி நான் செய்வேனா என்று கூறிய அவர் பாமகவை உறுவாக்கிய நான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினேன் அப்போது 108 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை கலந்து கொள்ள வேண்டாமென கூட்டத்தில் உள்ள ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவரை அழைத்து கேட்டதற்கு அவர் மறுக்கிறார். ஆனால் எனக்கு பேசியது தெரியும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிரங்கமாக கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எங்களுக்குள் மனக்கசப்பு எதுவும் இல்லை என்றும் மருத்துவராக இருந்தாலும் கசப்பை ஒருபோதும் தந்தது இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சிங்கத்தின் கால்கள் பழுது படவில்லை என்பதை காட்டுவதற்காக தான் நேற்று நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டேன் என்றும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானாவை பார்த்து கத்துக்கோங்க! தமிழக அரசுக்கு வழிகாட்டும் அன்புமணி..!