×
 

புஸ்ஸி ஆனந்த் பதவி பறிப்பு? - அடுத்தடுத்து குவியும் சர்ச்சை வீடியோக்கள்... சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்...!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விடவும் கைது நடவடிக்கைக்குப் பயந்து தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 

தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27 ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனாலும் இருவரும் கடைசி வரை சிக்கவில்லை. 

இதனிடையே, சிபிஐ விசாரணைக்கோரிய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், 16 நாள் தலைமறைவுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு வெள்ளை தாடியுடன் வந்த புஸ்ஸி ஆனந்த் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!

இதனையடுத்து விஜய்யின் கரூர் விஜயத்திற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்த தகவல் தான் தவெகவின் கடைக்கோடி தொண்டர்களைக்கூட கடுப்பில் ஆழ்த்தியதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். போஸ்டரில் விஜயை விட தன்னுடைய போட்டோவை பெரிதாக போடச்சொல்வது, கட்அவுட் பேனர்கள் வைக்கச் சொல்வது என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு செலவு இழுத்துவிடுவதில் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே சகலகலா வல்லவராக திகழ்ந்துவருகிறார் என குற்றச்சாட்டப்படுகிறது.

சரி கட்சி வளர்ச்சிக்காக புஸ்ஸி ஆனந்தின் அத்தனை அலப்பறைகளும் பொறுத்துக்கொண்ட தொண்டர்கள், இன்று கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றதும் தலைமறைவான இவரை எப்படி நம்புவது? என குழப்பத்தில் இருக்கிறார்களாம். பெரும்பாலான தவெகவினர் புஸ்ஸி ஆனந்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என சோசியல் மீடியா மூலமாக விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகிறார்களாம். கைதுக்கு பயந்துகிட்டு தலைமறைவான புஸ்ஸி ஆனந்த தன்னை காப்பாத்த நினைச்சாரோ தவிர தொண்டர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?, கரூர் விவகாரத்திற்கு என்ன பதில் சொல்ல வேண்டும்? நிலைமையை எப்படி கையாள வேண்டும் என எதையும் சொல்லாமல், ஏன் மறைஞ்சு போனாருன்னு சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். 

அதுமட்டுமில்ல கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியை வளர்க்க செலவிட்டதை விட புஸ்ஸி ஆனந்த் இமேஜை வளர்க்க செலவிட்டதே அதிகம் என அங்கலாய்க்கும் தவெக மாவட்ட செயலாளர்கள் சிலர், இனியாவது விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை கட்சிக்குள் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் புஸ்ஸி ஆனந்த் விளம்பர வளர்ச்சிக்காக தாங்கள் செலவிட்டது எவ்வளவு, ஒவ்வொரு ஊருக்கு போகும் போதும் 20 பார்சூனர் கார்கள் புடை சூழ பெரிய ஊர்வலம் போகவே போவேன் என அடம்பிடிக்கும் புஸ்ஸி ஆனந்திற்காக செலவிட்ட தொகை எவ்வளவு என சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களையும் விஜய்க்கு அனுப்பி வருகிறார்களாம். அப்படியானால் புஸ்ஸி ஆனந்த் விஜயை கட்சியை விட்டு நீக்கி விடுவாரா? கரூர் கலக்கத்தைப் போக்க சாட்டையைச் சுழற்றுவாரா? என தவெக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: பிசுரு தட்ட கூடாது… நேர்த்தியா முடிங்க! நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்க விஜய் உத்தரவு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share