×
 

கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!

தமிழக வெற்றி கழகத்தினர் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார். விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டையே உலுக்கியது.

கரூர் சம்பவத்தின் காய வடுக்கள் இன்னும் ஆறவில்லை. குழந்தைகள், கர்ப்பிணிகள் என 41 பேர் உயிரிழந்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கரூர் சம்பவத்தால் உறவுகளை இழந்தவர்கள் தவித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல... அதை செய்ய முடியாது... உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு...!

கரூர் துயரத்தில் பங்கேற்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தினர் யாரும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என தமிழக வெற்றிக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் SIT அலுவலகம் அருகே எரிந்த நிலையில் காகிதங்கள், பென்ட்ரைவ்! சந்தேகம்… பரபரப்பு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share