×
 

சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய ஜெகன் மோகன் ரெட்டி... தட்டித்தூக்கிய தெலுங்கு தேசம் கட்சி...!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்தார். தெலுங்கு தேச கட்சியின்  வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6735 வாக்குகளைப் பெற்றார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜ
ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியான  புலிவேந்துலாவில் நடைபெற்ற  ஜில்லா பரிஷத்  இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்தார். தெலுங்கு தேச கட்சியின்  வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6735 வாக்குகளைப் பெற்றார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர்   ஹேமந்த் ரெட்டி  685 வாக்குகளை மட்டுமே பெற்றார். கூட்டணி வேட்பாளர் லதா ரெட்டி 6050 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 6050 வாக்குகளை கூட்டினால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து வெற்றி பெற்ற மாரெட்டி லதா ரெட்டி தேர்தல் அதிகாரியிடமிருந்து அதிகாரப்பூர்வ வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை  பெற்றுக்கொண்டார்.
புலிவெந்துலா ஜில்லா பரிஷத் தேர்தலில்  வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றியில் பங்களிப்பு அளித்த தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜகவினருக்கு  நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் 74% அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.. ஆக.15 முதல் அமல்..!!

இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… தமிழக அமைச்சரவையில் முடிவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share