பிரதமரை பெண் எம்.பி.க்கள் தாக்க முயன்றார்களா? ரொம்ப கஷ்டமா இருக்கு... ஓம் பிர்லாவுக்கு MP ஜோதிமணி கடிதம்..!
பிரதமரை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து எம்பி ஜோதிமணி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறிய குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நிகழ்ந்தது. மக்களவையில் பிரதமர் மோடி தனது பதிலுரையை ஆற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.
பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கை அருகே கூடி, பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை கடுமையான குழப்பத்திற்குள்ளானது மற்றும் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி அன்றைய தினம் அவையில் பேச முடியாமல் போனது. இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பிரதமர் பதிலுரை ஆற்ற இருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிரதமரின் இருக்கை அருகே எதிர்பாராத சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அத்தகைய சம்பவம் நடந்திருந்தால், நாட்டின் ஜனநாயக மரபுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். இதனால், அத்தகைய ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் நேரடியாகக் கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புது புகைச்சல்: தளபதி vs ஜோதிமணி!! சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!
காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதினார். மக்களவையில் பிரதமரை பெண் எம்பிக்கள் தாக்கம் முயன்றதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது என்றும் ஆதாரமற்றது எனவும் தெரிவித்துள்ளார். பிரதமரை தாக்கம் முயற்சி என தாங்கள் கூறிய குற்றச்சாட்டு மனதை மிகவும் காயப்படுத்தியது எனவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக அதிகாரத்துக்கு எங்கள் குரல் அடிபணியாது..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி சு. வெங்கடேசன் திட்டவட்டம்..!