காலையில் கண் விழிக்கும் போதே இப்படியா?... குண்டைத் தூக்கிப்போட்ட மத்திய அரசு... கொதித்தெழுந்த ஜோதிமணி...!
சிலிண்டர் விலை உயர்வால் மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் மோடி அரசு -மார்ச் ஒன்பதாம் தேதி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்படும் என கரூரில் எம்பி ஜோதிமணி எச்சரித்துள்ளார்.
கரூர் மாவட்டம், முத்தலாடம்பட்டி தென்றல் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று காலை மக்கள் கண்விழிக்கும் போதே, வீட்டு உபயோக சிலிண்டருக்கு 60 ரூபாயும், வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு 150 ரூபாயும் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்கள் மீது, ஐந்து மாநிலத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் இந்தச் சுமையை ஏற்றியிருப்பது பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறது.
ஏழை எளிய மக்கள் நிதிச் சுமையல் தள்ளாடி கொண்டிருக்கின்றனர் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்த மூலம் சிறுகுரு தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமரை பெண் எம்.பி.க்கள் தாக்க முயன்றார்களா? ரொம்ப கஷ்டமா இருக்கு... ஓம் பிர்லாவுக்கு MP ஜோதிமணி கடிதம்..!
ஒன்றிய அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'த்ரீ-லைன் விப்' (Three-line whip) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது குறித்துப் பேசிய அவர், "திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் அவர் ஒரு 'ஸ்டார் கேம்பெய்னர்' (Star Campaigner) போலச் செயல்பட்டு, பாஜகவிற்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கினார். தமிழ்நாடு போல் மேற்கு வங்கத்திற்குச் சென்றிருப்பது அங்கிருக்கும் மம்தா பானர்ஜி அவர்களுக்கு ஸ்டார் காம்பைங் ஆக இருப்பார்.
மேலும், பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். ஆளுநரை வைத்து தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர். ஐந்து மாநில தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற நிலைப்பாட்டிற்கு தான் வந்துள்ளனர் என்று நினைக்கிறேன். தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வை செய்ய மாட்டோம் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக குண்டர்கள் அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய திமுக உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!