விஜயை கட்டுக்குள் வைக்க மாஸ்டர் ப்ளான்! அமித் ஷா - இபிஎஸ் ஸ்கெட்ச்! தப்புமா? சிக்குமா? தவெக!!
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நெருக்கடியை பயன்படுத்தி, அக்கட்சியை கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் காய் நகர்த்தி வருகின்றன.
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பிரச்சார நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், கட்சி உள்ளும், பொதுவெளியிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக ஆகியவை இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க முயல்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், த.வெ.க.வின் பிரபலத்தைப் பயன்படுத்தி திமுக ஆட்சியை கீழே இறக்கும் வகையில் இரு கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, த.வெ.க. தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்தன. கூட்ட நெரிசலைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யாததாக போலீஸ் குற்றம் சாட்டியது. இதனால், கட்சியின் பொதுச் செயலர் என். ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவானது.
உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை அணை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நெருக்கடியில், விஜய் ஒரு வாரமாக வெளியுலகில் தலையெடுக்கவில்லை. சமீபத்தில் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். கட்சியின் முதல் ஆண்டு விழா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் ப்ளான் மிஸ் பண்ணிடாதீங்க! இபிஎஸ்-யிடம் பாஜக தலைவர்கள் கொடுத்த ப்ளூ பிரிண்ட்!
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, குமாரபாளையத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில், சிலர் த.வெ.க. கொடிகளை அசைத்ததைப் பார்த்து, "கூட்டணிக்கு பிள்ளையார் சுழி ஏற்பட்டுவிட்டது" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
த.வெ.க. தரப்பு, அக்கொடிகளை அசைத்தவர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல, அதிமுக ஆதரவாளர்கள் என்று மறுத்தது. இருப்பினும், மே மாதத்தில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு, த.வெ.க. அதிமுக-பாஜக கூட்டணியில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே, பழனிசாமியின் மகன் மிதுன் விஜயிடம் பேசியதாகவும், பழனிசாமி-விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் சந்திப்பும் பரவலாக பேசப்படுகிறது. பழனிசாமி-விஜய் இடையேயான தொலைபேசி உரையாடலும் உறுதியானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி முடிவு, 2026 பொங்கல் பிறகு எடுக்கப்படும் என த.வெ.க. தெரிவித்துள்ளது.
மறுபுறம், பாஜகவும் த.வெ.க.வை கூட்டணிக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளது. கரூர் சம்பவ விசாரணையை சிபிஐக்கு மாற்றி, விஜயை தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று அக்கட்சி கணிக்கிறது.
பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பாஜகவை கொள்கை எதிரி என விமர்சித்த விஜய் இப்போது அமைதியாக உள்ளார். சிவகங்கை காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசை எதிர்த்தவர், கரூர் சம்பவத்துக்கு சிபிஐ வேண்டும் என்று கூறுகிறார்.
கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டாம்; சி.பி.ஐ., விசாரணையே வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தை த.வெ.க., அணுகியிருக்கிறது. இந்த நிலைப்பாட்டை விஜய் எடுப்பதற்கு, பா.ஜ., பின்னணி தான் காரணம். தேர்தல் கமிஷனில் நிலுவையில் இருந்த, இரட்டை இலை வழக்கை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல, கரூர் விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க, பா.ஜ., திட்டமிட்டு, தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இவ்விரு கட்சிகளின் ஆட்டத்தில், விஜய் சிக்குவாரா அல்லது தப்புவாரா என்பது விரைவில் தெரியும். த.வெ.க. தனித்து போட்டியிடும் என்று விஜய் முன்பு அறிவித்தாலும், சமீப நிகழ்வுகள் அவரது உத்தியை மாற்றலாம். காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் த.வெ.க.வை அணுகி வருவதாக தகவல்கள் உள்ளன.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் CBI விசாரணை! விஜய்க்கு நிம்மதி! களமிறங்கியது பாஜக!