திமுகவை சீண்டிய செங்கோட்டையன்... மறந்து போன வரலாற்றை தோண்டி எடுத்து மரண அடி கொடுத்த கே.என்.நேரு...!
இன்று எதிர்க்கட்சியில் அமருகிற நிலையை தமிழ்நாட்டு மக்கள் உருவாக்கிவிட்டார்கள். இனி உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இன்றைய வருவாய்த்துறை மானியக்கோரிக்கையின் மீது உரையாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஒரு சட்டமன்ற உறுப்பினரோடு திமுக இருந்த வரலாறு இந்த சட்டமன்றத்தில் உண்டு. ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரோடு திமுக எப்படி வீழுமோ, வீழ்ந்த வேகத்திலேயே அப்படியே எழுந்திருக்கக்கூடிய கட்சி என பேசினர்.
மாண்புமிகு அவை முன்னவர், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் ஆரம்பித்து ஆட்சி நடத்திய நீங்கள், இன்று எதிர்க்கட்சியில் அமருகிற நிலையை தமிழ்நாட்டு மக்கள் உருவாக்கிவிட்டார்கள். இனி உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கு முன்னாள் முதலமைச்சரைப் பற்றி ஒரு விவாதம் வந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவருடைய தலைமையில் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரைப் பற்றி அவர் பெயரைச் சொல்லும்பொழுது, புரட்சித் தலைவர் அவர்கள் எழுந்திருந்து சபையில் அந்த உறுப்பினரைப் பார்த்து, “கலைஞர் என்றுதான் நீ சொல்ல வேண்டும். நீ வாபஸ் வாங்கு, மன்னிப்பு கேள்” என்று சொன்னார்கள்.
இதையும் படிங்க: "NO TENSION"..! அதான் ஆன்லைன் இருக்கே... இணைய வழி பத்திரப்பதிவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
அந்த மாதிரி கண்ணியமிக்க சபைகளில் நமக்கு முன்னால் வழிவகுத்துத் தந்தவர்கள் ஆற்றிய கண்ணியத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார்.
அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முன்னாள் அமைச்சருக்கும் தெரியும். அவரும் அன்றைக்கு அமைச்சராக இருந்தவர்.
1977-ல் புரட்சித் தலைவர் இந்த புனிதக் கோட்டையில் அமர்ந்ததற்குப் பிறகு, அவர் உயிருடன் இருந்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை என்பதுதான் வரலாறு.
செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலும் மாண்புமிகு உறுப்பினர், கவனத்திற்கு... உறுப்பினர் கவனத்திற்கு... மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர் இருக்கும்போதே 1980-ல் நாடாளுமன்றத்தில் மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றது. அவர் இருக்கும்போதுதான் 1986-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையாக வெற்றி பெற்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறியதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!