×
 

விஜய் உடன் கூட்டணி... திடீரென அந்தர் பல்டி அடித்த கிருஷ்ணசாமி... மதுரை டூ நெல்லை மனமாற்றம்..!

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை என நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:  தென் தமிழகம் பல்வேறு துறைகளில் இன்னும் மேற்கு மாவட்டங்களுக்கு நிகராகவோ அல்லது சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு நிகராகவோ வளர்ச்சி அடையவில்லை. திருநெல்வேலியில் கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் அண்மை காலமாக தொழிற்சாலைகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

தூத்துக்குடியில், திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வந்து வறட்சியில் இருக்கின்ற காரணத்தினால் இங்கு இருக்கக்கூடிய இளைஞர்களில் வேலை வாய்ப்புக்காக திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் பிற மாநிலங்களுக்கும் இடம்பெயர்கிறார்கள்.

தூத்துக்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட நிறுவனத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கே உள்ளூரில் வாழக்கூடிய தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவர்களுடைய நிலம் தான் பெரும்பாலான அந்த கம்பெனிக்கு எடுக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: திருச்சி மக்களோட சத்தம் கேட்குதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீண்டிய விஜய்...!

வடமாநில தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது.  இதுபோன்ற தொழிற்சாலைகளில் 50 சதவீதத்திலிருந்து 70% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் வைத்திருக்கிறோம்.

அடுத்த கட்டமாக கங்கைகொண்டானிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.இன்னும் பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக தெரிகிறது.

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 
அவர் யாருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. கூட்டணியை பொறுத்தவரை மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் அறிவிக்க முடியும்.2026 ல் யாருமே வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம் என காட்சிகள் உறுதி கொடுக்க வேண்டும்.

விஜய் தரப்பில் இருந்து கூட்டணி அழைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்களும் முயற்சி எடுக்கவில்லை. இதுவரை எந்த அழைப்பும் இல்லை.2026 ல் புதிய தமிழகம் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு. இது தான் எங்கள் கோட்பாடு.ஜனவரிக்கு பிறகு தான் முடிவு சொல்ல முடியும் எனக்கூறினார். 

நேற்று மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கூட்டணிக்கு சொல்வோம். திராவிட கட்சிகளை தாண்டி விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தந்தால் அவருடன் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலிப்போம் எனக்கூறினார். ஆனால் சற்று நேரத்திற்கு முன்பு நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நாங்களும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெகவும் எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அழைக்கவில்லை என யூடர்ன் அடித்துள்ளார்.  

இதையும் படிங்க: “கேட்கல... சத்தமா...” விஜய் பேச்சைக் கேட்க முடியாமல் கதறிய தொண்டர்கள்... கடகடவென கலைந்த கூட்டம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share