கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து... தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட காங்கிரஸ்...!
தவெகவிற்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டதால் கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.
48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி.கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரஸ் ராஜினாமா செய்யுமா.?
அல்லது மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்பது தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது .
கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக உள்ளது. இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது .
48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக விற்கு 39 உறுப்பினர்கள் உள்ளனர் .
அதிமுக - 3
இயூமுலீ -1
மதிமுக - 1
காங்கிரஸ் - 2
சிபிஎம் - 1
இந்நிலையில் திமுக உறவை காங்கிரஸ் கட்சி இன்று முறித்துக் கொண்டது. இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவி வழங்கப்பட்டது.
மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் உள்ளார் .
இதையும் படிங்க: காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!
திமுகவின் உறவை காங்கிரஸ் கட்சி முறித்துக் கொண்ட நிலையில் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான். காங்கிரஸ் கட்சியைச் சேந்த இருவர்தான் கவுன்சிலர்களாக வெற்றிபெற்றனர். ஆனால், மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்க, திமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. அது இன்று வரை நீடித்தும் வருகிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்தே திமுக கவுன்சிலர்களுடன் மேயர் சரவணனுக்கு மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெறும்"..! விஜயுடன் "கை" கோர்த்தது ஏன்.? கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!