குழம்பிய மனநிலையில் கம்யூ.,க்கள்!! இரட்டை நிலைப்பாடு ஏன்? எல்.முருகன் போட்ட காட்டமான விமர்சனம்!
தற்போதைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவான முடிவை எடுக்காமல் குழப்பமான நிலையில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். ஒரு பக்கம் தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரிப்பதாக கூறிவிட்டு, மறுபுறம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அக்.6-ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு குறித்து எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார். ஒரு புறம் ஆதரவு தெரிவிப்பதும், மற்றொரு புறம் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுப்பதும் ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சட்டசபையில் தவெக உறுப்பினர்களை விட திமுக, அதிமுகவுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தேன்! சபாநாயகர் பேச்சால் கலகல!
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த அணுகுமுறை பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எல்.முருகன் விமர்சித்தார். தேர்தல் களத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதனை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவான முடிவை எடுக்காமல் குழப்பமான நிலையில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாடு ஒருபுறம் இருக்கும்போது, இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் கட்சிகள் தங்களது அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் முடிவு குறித்து எல்.முருகன் முன்வைத்துள்ள விமர்சனம், தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது முடிவை எவ்வாறு செயல்படுத்தப் போகின்றன என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA! அமைச்சர் ரமேஷ் சரமாரி குற்றச்சாட்டு!