×
 

யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்

சென்னையில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என திமுக அரசின் மெத்தனப் போக்கிற்குத் தளபதி விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீரழிந்துவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றச் சூழலை திமுக அரசு உருவாக்கி வைத்துள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் மிகக்கடுமையானச் சாடல்களை முன்வைத்துள்ளார். தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொடூரமானக் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடந்த சில துயரச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நந்தனம் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காக வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை இந்தத் 'திமுக அரசு' உருவாக்கி வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விஜய் முன்வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள். ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்களைத் தடுப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என அவர் விமர்சித்துள்ளார். இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய அரசு மெத்தனமாக இருப்பதால், சமூக விரோதக் கும்பல்களுக்குக் கொடுங்குற்றங்களில் ஈடுபடத் துணிச்சல் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி" என முதல்வர் மனசாட்சியே இல்லாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். தனது ஆட்சியின் இறுதிக்காலத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அவர், இனியாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: “விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை?” - 125 நாட்களுக்கு பிறகு ‘தளபதி’யை வம்புக்கு இழுத்த இ.பி.எஸ்!

மக்களுக்குப் பாதுகாப்பே இல்லாத இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று தனது பதிவில் விஜய் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: “பிப்ரவரி 2-ல் தவெக வேட்பாளர் பட்டியல்?” - தமிழக அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share