×
 

தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

சென்னையில் தொகுதியா, ஆளைவிடுங்க சாமி என அதிமுக கூட்டணி கட்சிகள் ஓட்டமெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் சென்னை தொகுதிகள் பங்கீடு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. “சென்னையில் தொகுதியா... ஆளை விடுங்க சாமி” என அதிமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று ஓட்டம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் சென்னையில் தொகுதிகள் கேட்டு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. காங்கிரஸ் தி.நகர் மற்றும் வடசென்னையில் ஒரு தொகுதியை, மார்க்சிஸ்ட் பெரம்பூர் அல்லது மதுரவாயலை, விசிக வடசென்னையில் ஒரு தொகுதியை கேட்டுள்ளன. இதனால் தி.மு.க. தரப்பும் திணறி வருகிறது.

ஆனால் அதிமுக கூட்டணியில் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. சென்னை தொகுதிகள் என்றாலே கூட்டணி கட்சிகள் “ஆளை விடுங்க” என ஓடுகின்றன. தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தி.நகர், வேளச்சேரி தொகுதிகளை மட்டும் பாஜக கேட்டு அடம் பிடிக்கிறது. மற்ற சென்னை தொகுதிகளுக்கு பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை.

இதையும் படிங்க: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!

பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் சென்னையில் தொகுதிகள் வேண்டாம் என உறுதியாக மறுத்துவிட்டன. மற்ற சிறு கட்சிகளும் தங்களுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. சென்னையை யாரும் விரும்பவில்லை.

இந்த சூழலில், தி.மு.க.வை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்ட வேட்பாளர்களை நிறுத்த அதிமுக தலைமை தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளே சென்னையில் தொகுதி வேண்டாம் என ஒதுங்குவதால், அதிமுக தனித்து பல தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

சென்னை தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராததால், இரு பெரும் கூட்டணிகளுமே திணறல் நிலையில் உள்ளன. வேட்பு மனு தாக்கல் நெருங்கும் நிலையில், சென்னை தொகுதிகளுக்கான இறுதி முடிவு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் சென்னைக்கு கடும் போட்டி இருக்க, அதிமுக கூட்டணியில் “ஆளை விடுங்க” என ஒதுங்கும் நிலை, தமிழக அரசியலை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: தவாக வேல்முருகனை வீழ்த்த திமுக திட்டம்! களமிறங்கும் மூன்று அமைச்சர்கள்! பக்கா ஸ்கெட்ச் தயார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share