சேகர்பாபு ரூ.10 லட்சம் குடுப்பாரு... போட்டிக்கு ரெடியா விஜய்..? சவால் விட்ட ஐ.லியோனி..!!
முதலமைச்சரின் விஜய்க்கு ஐ. லியோனி நேரடி சவால் விட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் திரு. சி. ஜோசப் விஜய், அரசியல் அரங்கில் நுழைந்ததிலிருந்தே பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் இருந்து வருகிறார். அவரது கட்சி தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பிறகு, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அண்மையில் அவரது நெற்றியில் தோன்றிய கருப்பு நிற பொட்டும், கையில் கட்டப்பட்ட சிவப்பு நிற கயிறும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை பொது நிகழ்ச்சிகளில் அல்லது திரைப்பட விழாக்களில் விஜய் இத்தகைய பொட்டு வைத்து பார்த்திராத நிலையில், இந்த மாற்றம் ஜோதிட ஆலோசனையின் விளைவாகக் கருதப்படுகிறது.
விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், அவருக்கு நீண்ட காலமாக ஆலோசனை வழங்கி வருபவர். தவெகவின் வெற்றியை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் இந்த ஜோதிடர், முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கப்பட்ட சர்ச்சையிலும் முக்கியப் பங்கு வகித்தார். இந்த நியமனம் எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஜோதிடரை அரசு பதவியில் அமர்த்துவது தமிழ்நாட்டின் பகுத்தறிவு அரசியல் பாரம்பரியத்துக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் முதலமைச்சருக்கே அமைச்சர் யாரென்று தெரியவில்லை என்றும் உங்களுடைய அமைச்சர்கள் லிஸ்ட்டை நீங்கள் வரிசையாக சொன்னால் எங்கள் அண்ணன் சேகர்பாபு 10 லட்சம் ரூபாய் கொடுப்பார் என்று ஐ.லியோனி கூறினார். தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தங்களது எம்எல்ஏக்கள் யாரென்று தெரியவில்லை என்றும் அமைச்சர்களுக்கும் தாங்கள் எந்த துறைக்கு அமைச்சராகி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?... ஸ்டாலினையே ஸ்டன் ஆக்கிய உ.பி.க்கள்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!
ஜோதிடத்தை நம்பி ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய் அந்த ஜோதிடத்தாலேயே வீணாக போவீர்கள் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார். இதுவரை விஜய் பொட்டு வைத்து யாரும் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இப்போது ஜோதிடர் சொன்னார் என்பதற்காக கருப்பு கலர் பொட்டும், கையில் சிவப்பு கலர் கயிறும் கட்டி உள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "மீண்டும் ஓர் பிளவு"..! திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய CPI..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!