அம்மாடியோவ்! 29 கிலோ தங்கம்! 200 கிலோ வெள்ளி!! ரூ.600 கோடிக்கு சொத்து! மலைக்க வைக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தாக்கல் செய்த தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.600 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மூத்த மகனும், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் காமராஜ் நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும் அவரது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸும் சேர்ந்து சுமார் ரூ.597 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் ரூ.340 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.270 கோடி அசையா சொத்துக்களும் அடங்கும். அவரது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அவர் ரூ.44 கோடி மதிப்புள்ள வைர நகைகள், ரூ.38 கோடி மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள், 17.5 கிலோ தங்க நகைகள் (ரூ.26 கோடி), 135 கிலோ வெள்ளிப் பொருட்கள் (ரூ.3.8 கோடி) உள்ளிட்டவற்றை வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். அவரது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸ் 3.6 கிலோ தங்க நகைகள் (ரூ.5.35 கோடி), ரூ.2.1 கோடி வைர நகைகள், ரூ.1.68 கோடி வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.14 கோடி ஆடம்பர கைக்கடிகாரங்களை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!
கடந்த நிதியாண்டில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரூ.59.37 கோடி வருமானம் ஈட்டியதாகவும், பல வங்கிகளில் ரூ.200 கோடிக்கும் மேல் வைப்புத் தொகை வைத்திருப்பதாகவும், தொழிலில் ரூ.14.28 கோடி பார்ட்னர்ஷிப் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ரூ.210 கோடி கடன்கள் உள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
எனினும், அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமலாக்கத்துறை (ED) அவர்மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கியதாகவும், சட்டவிரோத நிதியை ‘பிணையற்ற கடன்கள்’ என தவறாகக் காட்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் NIA நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், மேற்கு வங்காளத்தில் லாட்டரி மற்றும் நிதி முறைகேடு தொடர்பான மூன்று குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதே குடும்பத்தைச் சேர்ந்த மார்ட்டின் தாயார் லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாகவும், அவரது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி தேர்தல் களம் இப்போது லாட்டரி மன்னன் குடும்பத்தின் பிரமாண்ட சொத்து விவரங்களால் பரபரப்பாகியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வெளியான இந்த பிரமாணப் பத்திரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!