×
 

வக்பு வாரிய செயல்பாடுகள் மோசம்!! திமுக மீது முஸ்லிம்கள் அதிருப்தி! சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கும் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க., ஆட்சி அமைந்த பின், வக்ப் வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமாகி விட்டது. நிரந்தரமாக முதன்மை அலுவலரை கூட நியமிக்காமல் வஞ்சித்துள்ளது. இதனால், முஸ்லிம் மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக உருது பேசும் ‘தக்னி’ முஸ்லிம் சமூகம் திரும்பியுள்ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர், தி.மு.க. அரசு தங்களை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தக்னி முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், “தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு வக்ப் வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமடைந்துவிட்டது. நிரந்தர முதன்மை அலுவலரை கூட நியமிக்காமல் நீண்டகாலமாக வஞ்சித்து வருகிறது. சில முஸ்லிம் கட்சிகளை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்” என்று குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் சுமார் 1.7 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட தக்னி முஸ்லிம்கள், வட ஆற்காடு மாவட்டங்கள், கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியாக வசிக்கின்றனர். இவர்கள் கடந்த பல தேர்தல்களில் 12 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உங்க உழைப்பில் நம்பிக்கை இருக்கு... நிச்சயமா நம்ம ஆட்சிதான்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

ஆனால், “அரசியல், அரசு நிர்வாகம், கல்வி என எந்தத் துறையிலும் தக்னி மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. உருது பள்ளிகளுக்கு எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இருமொழிக் கொள்கை என்ற பெயரில் உருது மொழியை ஒரு சாதாரண பாடமாக்கி விட்டனர்” என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

முன்னதாக, சன்னி முஸ்லிம்களும் தங்கள் வழிபாட்டு முறைக்கு எதிரானவரை தலைமை ஹாஜியாக நியமித்ததால் தி.மு.க. அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இப்போது தக்னி முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தி.மு.க. தரப்பு பெரும் தடுமாற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

“இம்முறை தி.மு.க.வை நம்பத் தயாராக இல்லை” என்று தக்னி முஸ்லிம் அமைப்பினர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: களமிறங்கிய ஸ்டாலின்.. திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 4வது நாளாக நேர்காணல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share