×
 

இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு

ஆகஸ்ட் 26ஆம் தேதி உங்களுக்கு அந்த மெயிலை அனுப்பியிருக்கிறேன். அதற்கான அனைத்து முறையான விவரங்களையும் நான் அனுப்பியிருக்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாக உதவித்தொகை வராததால் தனது ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும், பல்கலைக்கழகக் கட்டணத்தைச் செலுத்தாததால் கல்லூரியில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் நேற்றைய தினம் மாணவர் பாரதிதாசன் கண்ணீர் மல்க சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, முறையாக அனைத்து தொகைகளும் அந்தந்த ஆண்டுகளில் மாணவருடைய வங்கிக் கணக்கிலும், அதேபோல் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

இந்த நிலையில், அதற்கு தற்போது மறுப்பு தெரிவித்து மாணவர் பாரதிதாசன் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அந்த வீடியோவில், தான் பில்களை அனுப்பவில்லை என்று மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுவதாக மாணவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேபோல், தான் இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், தொடர்ந்து தனக்கு வரவேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனைக் கண்டித்து திமுக தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள மாணவர் பாரதிதாசன், அனைத்து பில்களையும் தான் முறையாக சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், சமூக நீதித்துறையிலிருந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 20ஆம் தேதிக்கு நான் அனுப்பிய பில்களுக்கு இதுவரை பதில் அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் பதில் அனுப்பவில்லை என்று கூறுவது தவறான தகவல்.

நான் அனுப்பிய மெயில் ஒருவேளை உங்கள் ஸ்பேம் மெயிலில் இருக்கிறதா என்று சென்று சரிபார்த்துப் பாருங்கள். நான் மெயில் அனுப்பியிருக்கிறேன். இதோ, ஆகஸ்ட் 26ஆம் தேதி அதற்கான பில்களை அனுப்பியுள்ளேன். அதற்கான ஆதாரத்தையும் காட்டுகிறேன். ஸ்கிரீனிலேயே அது தெரியும்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி உங்களுக்கு அந்த மெயிலை அனுப்பியிருக்கிறேன். அதற்கான அனைத்து முறையான விவரங்களையும் நான் அனுப்பியிருக்கிறேன். ஆனால், நான் அனுப்பவில்லை என்று மறைத்து, மீண்டும் உங்களுடைய ஐடி விங்ஸ் அனைத்தையும் வைத்து என்னுடைய கனவை நீங்கள் சிதைக்கிறீர்கள்.

இன்னொன்று, மாணவர் இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று கூறுகிறீர்கள். சமூக நீதித்துறையிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பிஎச்.டி. படித்து வருகிறார்கள் என்பதைத் துறை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எல்லாரும் மாஸ்டர்ஸ் படிக்கிறார்கள். மாஸ்டர்ஸ் என்பது ஒரு வருட படிப்புதான். ஒரு வருடத்திற்கான கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தினால் போதும். அதேபோல் வாழ்க்கைச் செலவுகளையும் கல்லூரிக் கட்டணத்தையும் வழங்கினால் போதுமானது.

ஆனால், ஆராய்ச்சி என்பது அப்படி கிடையாது. கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்க வேண்டும். மாநாடுகளுக்குச் செல்ல வேண்டும். புத்தகங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். 24 மணி நேரமும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

நான் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். இந்தியாவில் ஜேஆர்எஃப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் திட்டம் உள்ளது. அது எனக்கும் கிடைத்தது. இந்தியாவிலேயே எனக்கு ஜேஆர்எஃப் கிடைத்துவிட்டது.

சில பேர், "இந்தியாவில் படிக்காமல் ஏன் வெளிநாட்டில் படிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். இந்தியாவிலேயே எனக்கு ஜேஆர்எஃப் கிடைத்திருந்தது. ஆனால், இந்தியாவைத் தாண்டி எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்துத்தான் நான் இங்கு வந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்தப் படிப்பை முடித்தால் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற நிறுவனங்களில் பேராசிரியராகும் வாய்ப்பு கிடைக்கும். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்று நினைத்துத்தான் நான் இங்கு வந்து எனது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஜேஆர்எஃப் மூலம் கிடைத்த சம்பளத்தையும் விட்டுவிட்டு, அப்பா, அம்மா உள்ளிட்ட எனது குடும்பத்தினரையும் மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். அவர்களுக்கு எந்தச் சம்பளமும் வழங்க முடியாத நிலையிலும், நான் இங்கு வந்து ஆராய்ச்சிக் கல்விக்காக மட்டுமே முழுமையாக நேரத்தைச் செலவிட்டு, சம்பளம் இல்லாமல் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், என் மீது மீண்டும் மீண்டும் நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனக்கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share