×
 
☰

உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

இபிஎஸ் கட்சி நடத்தவில்லை தனிநபர் நிறுவனம் நடத்துகிறார். உண்மையான அதிமுக தொண்டர்கள் TVK பக்கம் வந்துவிட்டனர் - அமைச்சர் அருண் ராஜ் விமர்சனம்

காஞ்சிபுரத்தில் 201 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், இபிஎஸ் கட்சி நடத்தவில்லை; தனிநபர் நிறுவனத்தை நடத்துகிறார். அதிமுகவை எப்போதோ காலி செய்து, நிர்மூலப்படுத்தியவர் இபிஎஸ் தான் என்றார்.

மேலும், உண்மையான அதிமுக தொண்டர்கள் பல்வேறு காரணங்களால் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வந்துவிட்டனர். தலைவர் விஜய் மீதான அன்பு, எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லாத தலைமை மீதான அதிருப்தியும் இதற்குக் காரணம். தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல மக்கள் இயக்கம். எங்களை நோக்கி வருபவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.

இடதுசாரிகளின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்கும் என நம்பிக்க  தெரிவித்த அமைச்சர், மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான ஆட்சியை இடதுசாரிகள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியைத் தமிழக முதல்வர் விஜய் சாத்தியப்படுத்தியுள்ளார். எனவே, அவர்களின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

பாமகவுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காலப்போக்கில்தான் தெரியும் எனப் பதிலளித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அதை முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர்கள் தென்னரசு, ரஞ்சித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share