இந்த ஒரு தகுதி இருந்தால் போதும்... விடுபட்ட மகளிருக்கு உடனே உரிமைத் தொகை கிடைக்கும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!
மத்திய பாஜக, அடிமை அதிமுக மகளிர் உரிமைத் தொகை கிடைக்கக்கூடாது என்று சதி வேலை செய்த நிலையில் இதன் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது என மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கருத்து
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்றே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை கொண்டாடும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா பேருந்து நிலையம் முன்பு வெடி வெடித்து அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, 5000 ரூபாய் பெண்களுடைய வங்கி கணக்குகளில் காலை முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜக, அடிமை அதிமுக மகளிர் உரிமைத் தொகை கிடைக்கக்கூடாது என்று சதி வேலை செய்து வருகின்றார்கள். இதன் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்ட்டில் வந்து விழுந்த ரூ.5000... தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் கொண்டாட்டம்...!
முதல்வர் பெண்களுக்காக, உழைக்கும் மகளிர்களுக்காக 5000 உரிமை தொகை அளித்துள்ளார். 2.0 ஆட்சி அமையப்போவது உறுதி. வெற்றி பெற்றவுடன் 2000 மகளிர் தொகை வழங்கப்படும். விடுபட்ட மகளிர்களுக்கு மேல் முறையீடு செய்தால் உடனடியாக வழங்கப்படும். ஆண்டிற்கு 3 லட்சம் கீழ் வருமானம் இருந்தால் உடனடியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைதி அருளுக்கு இடைக்கால ஜாமின்..! ஹைகோர்ட் நிபந்தனை..!