கடல் ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும்?... அமைச்சர் ஸ்ரீநாத் கொடுத்த அப்டேட்...!
தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அரசாணை வெளியிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழக சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா மற்றும் தமிழக மின்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சி 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவைச் சிலைக்கு அமைச்சர்கள் மதன் ராஜா ஸ்ரீநாத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில், ஐயா வ.உ.சி.யின் 155 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி.
அரசு சார்பில் முதலமைச்சர் ஐயா வ உ சி யின் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக போடும் ஸ்கெட்ச்... விடாப்பிடியாக அடித்த கம்யூனிஸ்ட்கள்...!
நம்முடைய தமிழக அரசு முதல்வர் பொறுப்பேற்ற பின்பு தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மீன்வளத்துறை அமைச்சராக இருக்கட்டும், நானாக இருக்கட்டும், முதல்வர் கவனத்திற்கு கொண்டு போய் உள்ளோம். தென் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாரம்பரிய விஷயங்களாக இருக்கட்டும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆக இருக்கட்டும் நல்ல முன்னெடுப்புகள் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது வரக்கூடிய காலங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்
இன்னும் சட்டமன்றம் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது அது முடிந்த பின்பு அரசாணை பாஸ் ஆகி ஒரு மாச காலமாகும் பின்னர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும். கடல் ஆம்புலன்ஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நிச்சயமாக விரைவில் செயல்படுத்தப்படும் .
உர தட்டுப்படை போக்க வேளாண்மை துறை அதிகாரிகளிடம் பேசி 10 மண்டலங்களாக பிரித்து விவசாயிகள் குறை நிறைகளை தெரிஞ்சுதான் வேளாண்மை பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு நல்ல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த தண்ணீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் நமது மாவட்டம் மட்டுமில்லை தமிழக முழுவதும் இந்த பிரச்சனை உள்ளது அனைத்து துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது பாபநாசம் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் நிலவரம் அறியப்பட்டு யாருக்கும் பிரச்சினை இல்லாதவாறு இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எடுக்கப்படும்
இதையும் படிங்க: தோழமை கட்சிகள் கூட்டம்..! “காங்கிரஸுக்கு TVK அதிகாரப்பூர்வ அழைப்பு"..! சத்தியமூர்த்தி பவனில் அமைச்சர்கள்..!!