வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!
வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு கொடைக்கானலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சென்றார். வத்தலகுண்டுவில் இஸ்லாமியர்கள் குழந்தைகளுடன் பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 5 நாட்களாக ஓய்வு எடுத்தார்.
அதன்படி கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்தில் இருந்து, சாலை மார்க்கமாக அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, காட்ரோடு வழியாக கடந்த 25-ம் தேதி சென்றார்.
பின்னர் இன்று 5 நாள் ஓய்வுக்கு பிறகு அவர், வெள்ளை நிற காரில் திமுக கட்சி கொடியான கருப்பு, சிவப்பு கொடி கட்டிய காரில் முன் சீட்டில் அமர்ந்து கண்ணாடி அணிந்தபடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அவர், வத்தலகுண்டு, நிலக்கோட்டை வழியாக மதுரை செல்லும் சாலையில் அவரை பார்ப்பதற்காக கூடியிருந்த பொது மக்களை பார்த்து கையசைத்தபடி மெதுவாக சென்றார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!
வத்தலகுண்டு பள்ளிவாசல் அருகே, காலை 11.40 மணியளவில் வந்தபோது, இப்பகுதி இஸ்லாமியர்கள் குழந்தைகளுடன் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர். அப்போது, மீண்டும் முதலமைச்சராவதற்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், காலத்தின் நாயகன் கலைஞர், என்ற புத்தகத்தை இஸ்லாமிய மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினர். பின்னர், மதுரை நோக்கி கிளம்பினார்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு..! காங்கிரஸ் மீண்டும் கலககுரல்..! திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்..!