நல்லகண்ணு நூற்றாண்டு விழா! முதல்வர் ஸ்டாலின் இப்படி பண்ணலாமா? கம்யூ., தோழர்கள் அதிருப்தி!
நல்லகண்ணு நுாற்றாண்டு விழாவை அரசு கண்டுகொள்ளாததால், முதல்வர் ஸ்டாலின் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு தனது நூற்றாண்டை நிறைவு செய்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான தலைவராக திகழ்ந்து வருகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் நல்லகண்ணு.
கடந்த ஆண்டு அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தினார். அந்த ஏற்பாடுகளை சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரியும் நல்லகண்ணுவின் நெருங்கிய நண்பரின் மகனுமான மணிவண்ணன் செய்திருந்தார். அரசு சார்பில் எந்த ஏற்பாடும் செய்யப்படாததால் அப்போதே கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
நூற்றாண்டு நிறைவு விழாவை அரசு சார்பில் பிரமாண்டமாக கொண்டாடுவோம் என்று முதலமைச்சர் தரப்பில் கம்யூனிஸ்ட் தோழர்களிடம் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நேற்று நல்லகண்ணு 101வது பிறந்தநாளை அடைந்த நிலையில், அரசு தரப்பில் எந்தப் பெரிய விழாவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: திமுக, அதிமுக, தவெக தப்பல!! கொளுத்தி போட்டு விளையாடும் ஐ.டி. விங்குகள்! அதிர்ச்சியில் உறையும் கட்சிகள்!
முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தியாகத்தின் பெருவாழ்வு தோழர் நல்லகண்ணுவுக்கு 101வது பிறந்தநாள் வாழ்த்துகள். விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர். இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியுடன் மட்டுமே முதலமைச்சர் நிறுத்திக்கொண்டதால், கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே தி.மு.க. மற்றும் முதலமைச்சர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவருக்கு அரசு மரியாதை அளிக்காதது ஏமாற்றமளிப்பதாக கம்யூனிஸ்ட் தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருமாகிட்ட பேசி நிறுத்த சொல்லுங்க ஸ்டாலின்?! விசிக திடீர் ப்ளான்!! திமுகவுக்கு புது சிக்கல்!