×
 

இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

மகளிர் உரிமைத்தொகை உயர்வு தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாடு தேர்வு முகமை மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல சூப்பர் மார்னிங் ஆக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார். 1.31 கோடி மகளிர்க்கு சிறப்பு தொகுப்பாக ரூபாய் 5000 வழங்கிவிட்டு வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு தான் வந்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பொறுப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தடைகள் மற்றும் சூழ்ச்சிகளை முறியடித்து மகளிர்க்கு ஐந்தாயிரம் ரூபாய் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்தும் வகையில் பொறுப்புணர்வு கூடி இருப்பதாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சர் ஆக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார். உணர்ச்சி பெருக்கின் உச்சத்துடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞர்களை தமிழ்நாட்டின் எதிர்காலம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக நிலை நிறுத்த தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!

அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் என்றும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக இருந்தால் அந்த கிராமம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி மூலம் 45,126 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அரசு திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு கிடைப்பது அரசு ஊழியர்களின் கைகளில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share