×
 

திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!

சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கலைஞர் திடலில் இன்று (பிப்ரவரி 7, 2026) மாலை தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். 

தென்தமிழகத்தின் இளைஞர் படையினரை ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மிக முக்கியமான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் பேசியபோது, “திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள், அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!

இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் தகுதியான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் அனைத்து நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளையும் முழுமையாகப் பின்பற்றி, தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் இணைந்து ஏற்பாடு பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த மாநாடு தென்மண்டல இளைஞர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிக முக்கியமான அறிவிப்புகள் இங்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வின் இளைஞர் படை வலுவடைவதற்கும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும்.

திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த நிகழ்வு, தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு மாலை நடைபெறுவதால், பலரும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுகவை துரத்தும் சிறுகனுார் சென்டிமென்ட்! தலைவிதியை மாற்றிய மேஜிக்!! மீண்டும் எடுபடுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share