×
 
☰

அந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாது! மதுராந்தகம், தாராபுரம் ரொம்ப முக்கியம்! திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு?

தேர்தல் பணிகளை கவனிக்க மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு தலா இரண்டு மாவட்ட செயலர்களையும் திமுக ஏற்கனவே நியமித்துள்ளது.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அதுபோன்ற நிலை தற்போது நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளிலும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக திமுக சார்பில் நியமிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து தீவிரமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், டெபாசிட்டை இழந்தார். இந்த தேர்தல் அனுபவத்தை நினைவுபடுத்திய ஸ்டாலின், அப்போது ஏற்பட்ட தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்வீட் அங்கிள்... அப்டேட் ஆகுங்க! ஒப்பாரி வைக்காதீங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி தாக்கு!

இதற்கிடையே, மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளை கவனிக்க மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு தலா இரண்டு மாவட்ட செயலர்களையும் திமுக ஏற்கனவே நியமித்துள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் என மொத்தம் 49 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். திமுக, தவெக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதால் இரு தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக களத்தில் இறங்குவதால் பிரசாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், திமுகவின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதில் தலைமையின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share