×
 

மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

இப்போது மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி தமிழகம் வருவது உறுதியாகி விட்டது. கடந்த முறை மதுராந்தகம் வந்த மோடி, இந்த முறை மதுரை வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வலுவான வடிவம் எடுத்துள்ளது. அதிமுகவுடன் பாஜக இணைந்து பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை இழுக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அந்த உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்போது மீண்டும் மோடி தமிழகம் வருவது உறுதியாகியுள்ளது. வரும் 28-ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் மோடி உரையாற்ற உள்ளார். மதுரை வருகை ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜ கூட்டணியில் புதிய கட்சி ஒண்ணும் இணைய போகுது! ட்விஸ்ட் வைக்கும் இபிஎஸ்!!! யார் அது?!

காரணம், திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம். மதுராந்தகம் கூட்டத்தில் மோடி இதை காரசாரமாக எடுத்துரைத்தார். “நாங்கள் தமிழ் கலாசாரத்தை வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பவர்கள். முருகனுக்கு விளக்கு ஏற்றுவது விவாதப் பொருளாக்கப்பட்டது. 

அப்போது நம் தலைவர்கள் பக்தர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஓட்டு வங்கிக்காக நீதிமன்றத்தையே அவமானப்படுத்தினர்” என்று அவர் அனல் பறக்க பேசினார்.

இந்த விவகாரம் திமுகவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மதுரை கூட்டத்தில் மோடியின் உரையில் பெரும் பகுதி இதை மையமாகக் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மதுரை வந்ததும் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னரே பிரசார மேடைக்கு வருவார் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது திமுகவினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பகுதியில் திருப்பரங்குன்றம் விவகாரம் ஏற்கனவே உணர்வுபூர்வமான பிரச்சினையாக உள்ளது. மோடியின் வருகையும் கோயில் தரிசனமும் இதை மேலும் வலுப்படுத்தும். என்டிஏ கூட்டணி இதை பயன்படுத்தி தமிழகத்தில் தமிழ் கலாசாரம், இந்து உணர்வுகளை முன்னிலைப்படுத்தி வாக்குகளை இழுக்க முயல்கிறது.

திமுக அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மோடியின் மதுரை பிரசாரம் தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. என்டிஏவின் இந்த உத்தி தமிழக மக்களிடையே எந்த அளவுக்கு செல்வாக்கு பெறும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share