அதிமுக - பாஜ கூட்டணியில் புதிய கட்சி ஒண்ணும் இணைய போகுது! ட்விஸ்ட் வைக்கும் இபிஎஸ்!!! யார் அது?!
'புதிய கட்சி ஒன்று அ.தி.மு.க., கூட்டணியில் ஓரிரு நாளில் இணையும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, “ஓரிரு நாளில் ஒரு புதிய கட்சி நமது கூட்டணியில் இணைய உள்ளது” என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜனவரி 12) நடந்த நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலின்போது அ.தி.மு.க. துணை பொதுச்செயலர் முனுசாமி, பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விருப்ப மனு அளித்தவர்களைத் தொகுதி வாரியாக அழைத்து, மாவட்டச் செயலர்கள் முன்னிலையில் பழனிசாமி நேரடியாக நேர்காணல் நடத்தினார்.
இதையும் படிங்க: அமித்ஷாவையே அலறவிட்ட டிடிவி தினகரன்!! கூட்டணிக்கு வர அடுக்கும் கண்டிஷன்!! தலையில் அடித்துக்கொள்ளும் இபிஎஸ்!
அப்போது பழனிசாமி கூறியதாவது: “ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த முடியும். தகுதியானவர், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவர் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், அந்தத் தொகுதியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.”
நேர்காணலில் கலந்து கொண்ட மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், “தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த பழனிசாமி, “தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே பா.ம.க. நமது கூட்டணியில் இணைந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் ஒரு புதிய கட்சி நம்முடன் இணைய உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள். மூன்று மாதங்களில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பெரிய பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக, பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 30 சீட்டு!! ஒரு எம்.பி போஸ்ட்டு!! எடப்பாடிக்கு பிரேமலதா வைக்கும் நிபந்தனை! கூட்டணியில் இழுபறி!