MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? அதிமுகவில் அடுத்த விக்கெட்! அடித்து ஆடும் CM விஜய்!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். விரைவில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது அவர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். விரைவில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக மாறுவார். மேலும், வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க திட்டம்? அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய ரெடி! - நிர்மல்குமார்!
ஏற்கனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆக குறையும் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயரக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சபாநாயகரிடம் உண்மையிலேயே ராஜினாமா கடிதத்தை அளிக்கிறாரா, அதன்பிறகு அவரது அரசியல் நகர்வு என்னவாக இருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அவர் தற்போது தலைமைச் செயலகத்தில் இருப்பதால், ராஜினாமா தொடர்பான அடுத்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!